ரனில் மைத்ரி இடையே விஷேட கலந்துரையாடல் சற்றுமுன் ஆரம்பம் ; ஐ தே கட்சி அமைச்சர்கள் இரவு 9 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார்கள் ..


அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே  இடம்பெற்றுவருவதாக  கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்திருந்த நிலையில் நாளையோ அல்லது அடுத்துவரும் ஓரிரு தினங்களிலோ அந்த மாற்றம் இடம்பெறும் எனவும் அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இது தவிர ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரையும் இன்று இரவு 9 மணிக்கு பிரதமரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

Comments