மல்லிகை தீவு விவகாரம்: பொலிஸ் மா அதிபருக்கு BBS கடிதம்
மூதூர், மல்லிகை தீவில் பாடசாலை மாணவியர் மீ பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது பொது பல சேனா.
கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் நபர்களே சம்பவத்தில் சந்தேக நபர்கள் என பரவலாக பேசப்படுகின்ற நிலையில் ஏலவே குற்றவாளிகளுக்கு உதவிய இருவர் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எனினும், கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் தற்போது அதில் அரசியல் புகுந்திருப்பதாகவும் நல்லாட்சிக்கு இது ‘நல்லதில்லை’ எனவும் அவ்வமைப்பு சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விகாரம் தொடர்பாக அப்பிரதேசத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமையும் இதன் போது பொது மக்கள் பொலிசாருக்கு கால அவகாசம் கொடுக்க இணங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment