மஹிந்தவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் பிரதமர்!


நடந்து முடிந்த மகிந்த தலைமையிலான கூட்டு எதிர் முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களும் அதன் பின்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் விமர்சனங்களும் மிகைப்படுத்தபடுவதாலும் மகிந்தவின் கரங்கள் பலப்படுத்ப்பட்டு மீன்டும் ஆட்சியில் அமர்ந்துவிடுவாரோ என்ற சந்தேகமும் அரசை அச்சுறுத்தும் நகர்வும் வலுப்பெற்று வரும் நிலையில்.

நல்லாட்சி அரசும் மகிந்தவின் மே தினக்கூட்டத்திற்கு காலி முகத்திடலை வழங்கிய நோக்கம் அதன் பின்னணி பற்றிய சந்தேகம் கேள்வியும் இப்போது பலதரப்பாலும் எழுப்பப்பட்டு வருவதை காணலாம்.

மகிந்தவின் மே தினக்கூட்டம் அரசுக்கு அச்சுறுத்தளையும் தான் இழந்த பதவியின் பலத்தையும் காட்டுவதற்காக அமைந்து இருந்தாலும் இக்கூட்டத்திற்குகான இட அனுமதி அரச நிர்வாகத்தின் ஊடாகத்தான் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மே தினத்திற்கான முன் ஏற்பாடுகளை மகிந்தவின் கூட்டு முன்னணியினர் பல சவால்களை அரசுக்கு விட்ட நிலையில்தான் இந்த மே தின நிகழ்வை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளை செய்து கொண்டிருத்தனர். இவைகளை எல்லாம் அறிந்திருந்தும் மகிந்தவின் மே தினக்கூட்டத்திற்கு காலிமுகத்திடலை பொருத்தமான இடமாக ஒதுக்கி கொடுத்ததன் பின்னணியில் பிரதமர் ரணில் மறைமுகமாக செயற்பட்டு இருக்கின்ராரா ? என்கின்ற சந்தேகமும் கேள்வியும் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.

கடந்த மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இருந்து மகிந்த – ரணில் இருவருக்கும் இடையிலான எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று அமுலில் இருந்து வந்திருப்பதை பல வரலாற்று சம்பவங்கலை நினைவுபடுத்திப்பார்க்கலாம்.

உதாரணமாக 2014 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தலைமைத்துவ போட்டியும் தலைவர் தெரிவும் ரணிலுக்கு எதிரான சஜித் பிரமதச குழுவினரின் அதிருப்தியும் இருந்த நிலையில் மகிந்தவின் முழு பாதுகாப்பு பந்தபஸ்த்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்துக்கு பாதுகாப்பு வழங்கி அதிருப்தியாலார்களை அடக்கி அச்சுறுத்தி ரணிலுக்கு தலைமை பதவியை கொடுப்பதில் மகிந்தவின் பங்களிப்புகள் மறைமுகமாக இருந்ததை காணலாம் ..

அதேபோல் கடந்த ஆட்சியில் மகிந்தவின் குடும்பத்தால் நடந்தாக கூறப்படுகின்ற பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் விடயத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் அரச அதிகாரிகளின் செயற்பாட்டை குறைக்கின்ற விடயத்தில் பிரதமர் ரணிலின் நேரடி தலையீடுகள் இருப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக பல விமர்சனங்கள் உள்ளது.

பிரதமர் ரணிலின் கடந்த கால ஆட்சிகளின் போது பல வகையான ஒப்பந்தங்கள் இரகசியமாகவும் சில ஒப்பந்தங்கள் வெளிப்படையாகவும் செய்யப்பட்டு இருந்தாலும் அவைகள் எதுவும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுவதுமில்லை அவைகள் ஒழுங்காக கடைப்பிடிப்பதும் இல்லை

தேர்தல் காலங்களில் செய்யப்பட்ட பல ஒப்பந்த்தங்களில் அஸ்ரப் – ரணில் , அதாவுல்லாஹ் – ரணில் , ஹக்கீம் – ரணில்; ரிஷாத்-ரணில் மலையாக அரசியல் கட்சிகளின் தலைமைகள் – ரணில் என்ற தேர்தல் கால ஒப்பந்தங்கள் யாவும் அந்த தேர்தலுக்கான ஆசனப்பங்கீடு தேசியப்பட்டியல் ஒதுக்கீடு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தில் அமைச்சுப்பதவி ஏனைய அனுகூலங்கள் என எதிர்பார்ப்புகளுக்காக செய்யப்படும் ஒப்பந்தங்களில் நேரடியாக இவைகள் தெரிந்தாலும் ஒப்பந்தங்களின் மறைமுகம் என்ன ? அதன் நன்மைகள் அடைந்தவர்கள் யார் ? ஒப்பந்தங்களை மீறிய சந்தர்பங்கள் எல்லாம் பிரதமர் ரணிலுக்கு புதிதும் அல்ல அவரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் வரலாற்று பதிவாக இருந்தாலும் அவ்ஒப்பந்தங்களின் திரைமறைவில் பல சந்தேகங்கள் இன்றுவரையும் உள்ளது.

அது மாத்திரமின்றி 2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் செய்து கொண்ட சமாதான புரிந்துணர்வு உடன்படிக்கையானது ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு மாத்திரமின்றி, தனது அமைச்சரவைக்கு அறிவிக்காமல் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதாக அப்போது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததாகவும் , அன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியின் வீழ்ச்சிக்கும் ஒப்பந்தம் வழிவகுத்தாகவும் சிங்கள தேசியக் கட்சிகள் குற்றம் சுமத்தியதுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியிற்கு எதிரான பல பிரச்சாரங்களை நாடு முழுவதும் .செய்தார்கள்.

அன்று பிரதமர் ரணில் அவர்கள் தேசிய பிரச்சனைக்கான முக்கியத்துவம் வாய்ந்த சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்வதற்கான அனுமதியை கூட தனது அமைச்சரவியில் அறிவிக்காமல் நடந்தவர்

இன்று மறைமுக ஒப்பந்ததில் எவ்வளவு இரகசியமாகவும் கவனமாகவும் நடந்துகொண்டிருப்பார் என்றும் அன்று ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியை குற்றம் சுமத்திய அன்றைய சிங்கள கடும் போக்குக்கட்சியின் தலைவர்கள்தான் இன்றைய மகிந்தவின் கூட்டனியின் முன்னணியில் இருப்பவர்கள் என்பதையும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் ஆகவே பிரதமர் ரணிலில் – மகிந்த இரகசிய உறவும் இதன் உண்மைத்தன்மையும் நாட்டில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது அல்லது சுதந்திரக்கட்சியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது அல்லது பிரதமர் ரணிலின் பலவீனங்களை புரிந்து கொண்ட மகிந்த அணியினர் அடுத்த நகர்வை எப்படி முன்னேடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.

Comments