வீடியோ)).,நியாஸ் ஹாஜியின் அனுசரணையோடு வாழைச்சேனை இளைஞர் கழகத்தினால் மாணவர்கள் கெளரவிப்பு

Ihzana Fareed

வாழைச்சேனை இளைஞர் கழகத்தின் 53வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பிரதேசத்தில் புலமைப்பரிசில், ஜீ.சீ.ஈ.சாதாரன தரம், உயர் தரம், விளையாட்டு மற்று இளைஞர் கழகங்கள் சார்பாக விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களை முன்னிலைபடுத்தி பரிசில்கள் வழங்கி கெளரவப்படுத்திய நிகழ்வு நேற்று மாலை 20.05.2017 இளைஞர் கழகத்தினால் வாழைச்சேனை இந்து கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

ஓட்டமாவடி அக்கீல் டயர் வியாபரதளத்தின் உரிமையாளர் அல்-ஹாஜ் நியாசின் அனுசரனையோடு இடம் பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுபினர் சேனாதிராஜா ஜயானந்தமூர்த்தி பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்ததுடன் விஷேட அதிதீகளாக பிரபல ஓட்டமாவடி வர்த்தகர் நியாஸ் ஹாஜி, முன்னாள் இந்து கல்லுரியின் அதிபர்கள், பிரதேச கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், அதிகளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டதினை அவதானிக்க கூடியதாக இருந்தது

Comments