இந்திய பிரதமரை பின் தொடர்ந்த மர்மநபர் கைது


இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த வாகன பேரணியில் பயணித்த மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நரேந்திர மோடியுடன் பயணித்த பிரபு பாதுகாப்பு பிரிவு மோட்டார் சைக்கிள்களுடன் ஒன்றாக இணைந்து சந்தேகத்திற்கிடமாக பயணித்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

W.A.D.டில்ஷான் என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இளைஞர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 25 ஆயிரம் ரூபாய் சரீத பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Comments