தொடர்ந்தும் அமைச்சு பதவிகளை காப்பாற்றும் நல்லாட்சி


நல்லாட்சி அரசாங்கதின் அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்தின் பலவீனத்தையே வெளிப்படுத்தியுள்ளது. உறுதியாக அரசாங்கம் முன்செல்ல முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஊழல் மோசடிக்காரர்களை தொடர்ந்தும் அமைச்சு பதவிகளில் தக்கவைத்து காப்பாற்றுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

நல்லாட்சி அரசாங்கத்தில் திடீர் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Comments