பாதிக்கப்பட்டோருக்கு உதவ விசேட திட்டம்


உலமா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம் நடவடிக்கை
சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களை வழங்­கு­வ­தற்கும், அவர்­க­ளது வாழ்க்­கையை மீளக் கட்­டி­யெ­ழுப்­பவும் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வழி­காட்­டலின் கீழ் திட்­டங்­களை வகுத்­துள்­ளது.

இந்த திட்­டங்களை உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு சமூ­கத்­தி­லுள்ள தன­வந்­தர்கள் பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­துக்கு குறிப்­பாக நிதி மற்றும் அன்­ப­ளிப்­பு­களை வழங்­கு­மாறு கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் பகி­ரங்க வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்­தியும் இதே கோரிக்­கையை முன்­வைத்­துள்ளார்.

சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு உத­விகள் வழங்­கு­வது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கேட்போர் கூடத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலை­மையில் நடை­பெற்­றது.

இக் கலந்­து­ரை­யா­டலின் போதே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வழி­காட்­டலின் கீழ் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம், பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் உலமா சபையின் கிளை­களின் ஒத்­து­ழைப்­புடன் நிவா­ரணப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கும், பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஆறு மாவட்­டங்­களில் தற்­போது உலமா சபையின் கிளை­களைச் சேர்ந்த பிர­தி­நி­திகள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தை 12 பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றன. அவை கொள்­ளுப்­பிட்டி, தெஹி­வளை, கல்­கிசை, கிரு­லப்­பனை, கொம்­ப­னித்­தெரு, மரு­தானை, தெமட்­ட­கொட, அளுத்­கட, கிராண்ட்பாஸ், கொழும்பு வடக்கு, கொலன்­னாவ, புறக்­கோட்டை, மாளி­கா­வத்தை என்­ப­ன­வாகும். 

பாதிக்­கப்­பட்­டுள்ள மாவட்­டங்­களில் 6 மாவட்­டங்கள் 12 பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்­க­ளிடம் பகிர்ந்து வழங்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்கள் குறிப்­பிட்ட மாவட்­டங்­களின் உலமா சபை­யி­ன­ருடன் ஒன்­றி­ணைந்து மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­துடன் உத­வி­க­ளையும் வழங்­க­வுள்­ளன.

26 பள்­ளி­வா­சல்­களை உள்­ள­டக்­கி­யுள்ள தெஹி­வளை – கல்­கிசை பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் மாத்­தறை மாவட்­டத்­துக்கும், 14 பள்­ளி­வா­சல்­களை உள்­ள­டக்­கி­யுள்ள கிரேண்ட்பாஸ் பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் மற்றும் 10 பள்­ளி­வா­சல்­களை உள்­ள­டக்­கி­யுள்ள தெமட்­ட­கொட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்­க­ளுக்கு கேகாலை மாவட்­டமும் 11 பள்­ளி­வா­சல்­களை உள்­ள­டக்­கி­யுள்ள கொள்­ளுப்­பிட்டி மற்றும் பம்­ப­லப்­பிட்டி பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­துக்கு இரத்­தி­ன­புரி மாவட்­டமும் தலா 10 பள்­ளி­வா­சல்­களை உள்­ள­டக்­கி­யுள்ள மாளி­கா­வத்தை மற்றும் கொம்­ப­னித்­தெரு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்­க­ளுக்கு கம்­பஹா மாவட்­டமும் தலா 12 பள்­ளி­வா­சல்­களை உள்­ள­டக்­கி­யுள்ள புறக்­கோட்டை மற்றும் அளுத்­கட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்கள் 9 பள்­ளி­வா­சல்­களை உள்­ள­டக்­கி­யுள்ள மரு­தானை பள்­ளி­வாசல் சம்­மே­ளனம், 26 பள்­ளி­வா­சல்­களை உள்­ள­டக்­கி­யுள்ள கொழும்பு வடக்கு பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் என்­ப­வற்­றுக்கு கொலன்­னாவ பகு­தியும் பொறுப்­பாக வழங்­கப்­பட்­டுள்­ளன.

கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், “அநேகமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

நீர் வடிந்தோடிய பின்பு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வீடுகள் துப்புரவு செய்யப்படவேண்டியுள்ளதுடன், உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

இந்தப் பணிகளில் உலமா சபையும் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்படும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு டாக்டர்கள், உளவியலாளர்கள் என்போரும் முன்வந்துள்ளனர்” என்றார்.

Comments