கலகெதர முஸ்லிம் வாலிபர்களின் ஏற்பாட்டில் இப்தார். அழைப்பை ஏற்று பிரதேச தேரர்களும் கலந்துகொண்டனர்.


கலகெதர முஸ்லிம் வாலிபர்கள் சிலரது ஏற்பாட்டில் 2017.05.28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலகெதர மடிகே ஜாமிஉல் அன்வர் ஜும்மா மஸ்ஜிதில் இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் முஸ்லிம் வாலிபர்களது அழைப்பை ஏற்று பிரதேசத்தின் பெளத்த விகாரைகளின் பிரதான பிக்குகள் உற்பட பல பெளத்த துறவிகள் இந்த்த நிகழ்வில் பங்குபற்றினர்.

அத்தோடு கலகெதர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் துஸிதா என்.டப் ரணசிங்க மற்றும் நிர்வாக கிராம சேவகர் எஸ்.எம் அபேகோன் உற்பட கிராம சேவகர்கள், அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலகெதர பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி அவர்களும் பங்குபற்றினர்.

இந்திகழ்வின்போது ரம்புக்கணையை சேர்ந்த மெளலவி கலீல் அவர்களால் சிங்கள மொழியில் நோன்பு பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையும் எமது பொருப்புகள் பற்றியும் சிறப்பான ஒரு பயான் முன்வைக்கப்பட்டது.

தகவல்- றிஸ்மி ராஸிக்
கலகெதர





Comments