அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தனது சம்பளத்தை வழங்கிய எஸ் எம் மரிக்கார்..
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக பா உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வழங்கப்படும் சம்பளத்தை அனர்த்தங்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்திக்கொள்ளுமாறு பா உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ் எம் மரிக்கார் பாரளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தனது ஜூன் மாத சம்பளத்தை இடர் முகாமைத்துவ பணிகளுக்காக சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.


Comments
Post a Comment