தொழிலாளர் நலன்களை மதிக்கிறோமா... மிதிக்கிறோமா...


மே தினம் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. தொழி­லா­ளர்­களின் நலன்­களை உறு­திப்­ப­டுத்­து­வதும் அவர்­க­ளது உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­துமே இந்த மே தினம் அல்­லது தொழி­லாளர் தினத்தின் நோக்­க­மாகும்.

எனினும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இலங்­கையில் இத் தின­மா­னது அர­சியல் கட்­சி­களின் பலத்தைக் காட்­டு­கின்ற தின­மா­கவே அர்த்தம் கொள்­ளப்­ப­டு­கி­றது. 

பிர­தான தேசிய அர­சியல் கட்­சிகள் நாடெங்­கி­லு­மி­ருந்து ஆத­ர­வா­ளர்­களை அழைத்து வந்து தமது அர­சியல் கட்­சி­களின் கூட்­டங்­களை நடாத்­து­கின்­றனர். இதன்­போது தமது கட்­சி­களின் அர­சியல் நிலைப்­பா­டு­க­ளையும் அடுத்த கட்­சி­களின் குறை­க­ளையும் கூறி இதனை முற்­றிலும் அர­சியல் நாளா­கவே மாற்­றி­வி­டு­கின்­றனர். 

உண்­மையில் இந்த மே தினக் கூட்­டங்­களில் பங்­கு­பற்­று­கின்ற பொது மக்கள் கூட கட்­சி­களின் மீதான பற்­றினால் வரு­கின்­றனர் எனக் கூற முடி­யாது. மாறாக பணத்­துக்­கா­கவும் சாப்­பாட்­டுக்­கா­கவும் மது­பான போத்­தல்­க­ளுக்­கா­கவும் வரு­வோரே அதி­க­மாகும். 
மே தினம் அன்று தொழி­லா­ளர்­களை மதிக்க வேண்­டிய அர­சியல் கட்­சிகள் அவர்­களை அவ­ம­திக்­கின்­றன. வெயிலில் நிறுத்தி வைத்து தமது அர­சி­ய­லுக்­காக அவர்­க­ளது வியர்­வை­களை உறிஞ்­சு­கின்­றன. மொத்­தத்தில் தொழி­லாளர் தினத்தில் அவர்­க­ளது உரி­மை­களை கொடுப்­ப­தற்கு பதி­லாக பறிக்­கின்­றனர். இந் நிலை மாற்­றப்­பட வேண்டும். தொழி­லா­ளர்­களின் நலன்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேண்டும்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, முஸ்லிம் சமூ­கத்தில் மே தினம் பெரி­தாக முக்­கி­யத்­து­வப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. அது பற்றிப் பெரி­தாக பேசப்­ப­டு­வ­து­மில்லை. எனினும் உல­கி­லுள்ள மதங்­களில் தொழி­லா­ளர்­களின் உரி­மை­களை அதிகம் வலி­யு­றுத்­திய ஒரே மார்க்கம் இஸ்­லாமே. 
"தொழி­லா­ளியின் வியர்வை காயும் முன்னர் அவ­ரது கூலியை கொடுத்­து­வி­டுங்கள்" என்­ப­துதான் இஸ்லாம் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள உச்­ச­பட்ச கௌர­வ­மாகும். எனினும் இஸ்­லாத்தின் இந்த உத்­த­ரவை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் எந்­த­ளவு தூரம் நடை­மு­றைப்­ப­டுத்­து­கிறோம் என்­பது கேள்­விக்­கு­றி­யாகும்.

தமது நிறு­வ­னங்­க­ளிலோ வர்த்­தக நிலை­யங்­க­ளிலோ பணி­பு­ரியும் தொழி­லா­ளர்­க­ளுக்கு போது­மான சம்­பளம் வழங்­கு­வதில் நம்மில் பலர் தவ­றி­ழைக்­கின்­றனர். சிலர் பல மாதங்­க­ளாக சம்­ப­ளமே வழங்­காது ஏமாற்­று­கின்­றனர். அன்­றாட ஏழைக் கூலித் தொழி­லா­ளர்­க­ளுக்கு கூட பொருந்திக் கொண்ட பணத்தை வழங்க தவ­று­கின்­றனர். இந்­நிலை மாற வேண்டும்.

அதே­போன்­றுதான் பள்­ளி­வா­சல்­களில் கட­மை­யாற்றும் கதீப், முஅத்­தின்­களின் நிலைமை அன்­றாட கூலித் தொழி­லா­ளர்­களை விட மோச­மா­ன­தாகும். மிகக் குறை­வான சம்­ப­ளத்­து­டனும் இறுக்­க­மான நிபந்­த­னை­க­ளு­டனும் பணி­யாற்ற இவர்கள் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களால் நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றனர். 

எனினும் கதீப், முஅத்­தின்­களின் சம்­பள விவ­காரம் குறித்து நமது சமூ­கத்தில் அதிகம் பேசப்­ப­டு­வ­தில்லை. சமூகப் பிரச்­சி­னை­களை மிம்­பரில் பேசு­கின்ற கதீப்­மா­ருக்கு அவர்­க­ளது பிரச்­சி­னை­களைப் பற்றி பேசுவதற்கு கூட அனுமதியில்லை. சம்பளப் பிரச்சினை பற்றிப் பேசினாலே நிர்வாகிகளால் நிந்திக்கப்படுகின்றனர். வேலையை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

எனவேதான் இன்றைய தொழிலாளர் தினத்தில் நமக்காக வாரத்தில் 7 நாட்களும்  இறை பணி செய்கின்ற கதீப், முஅத்தின்களின் உரிமைகள் தொடர்பில் நாம் சிந்திக்கவும் அதன்பால் செயற்படவும் கடமைப்பட்டுள்ளோம்.

Comments