இயற்கை அனர்த்தத்தை கேள்வியுற்ற ஜனாதிபதி அதிர்ச்சி!
உயிர்களை காவு கொண்ட திடீர் அனர்த்த நிலைமையை கேள்வியுற்று தான் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளானதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டார் வலைத்தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றிருந்த ஜனாதிபதி தனது விஜயத்தை முடித்து கொண்டு இலங்கை புறப்பட்டுள்ளார்.


Comments
Post a Comment