முஹம்மது சப்னி மரணம்... காத்தான்குடியில் மூன்று இளைஞர்கள் கைது.


-அப்துல் கையூம்-

ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணித்தை அடுத்து அவருடன் பயணம் செய்து விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்களான மேற்படி நான்கு இளைஞர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் ஏட்டுக்குப்போட்டியாக சைக்கிளை செலுத்தி சென்றபோது விபத்துக்குள்ளாயினர். இதில் படுகாயமடைந்த நிலையில் நால்வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த முஹம்மது சப்னி (வயது-17) என்பவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தொடர்ந்து குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த முஹம்மத் சபான் (வயது-17), முஹம்மத் றிழ்வான் (வயது-17), முஹம்மத் பஸ்கான் (வயது-18) ஆகிய மூன்று இளைஞர்களுமே கைது செய்யப்பட்டவர்களாவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments