‘மக்கள்’ தந்த பதவியை விடமாட்டேன்: கீதா அடம்!
உச்ச நீதிமன்றில் தான் இன்று தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை மக்கள் தந்த பதவியை விடமாட்டேன் என தெரிவித்துள்ளார் கீதா குமாரசிங்க.
இரட்டைக்குடியுரிமையுடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த கீதாவுக்கு எதிராக காலியைச் சேர்ந்த இருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் இன்று அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே உடனடியாக உச்சநீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ள கீதா, அதற்கான தீர்ப்பு வரை தான் தொடர்ந்தும் நாடாளுமன் உறுப்பினராக இயங்கப் போவதாகவும் அதை யாரலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் தகுதியை இழந்த காரணத்தினால் இதுவரை அரசாங்கத்திலிருந்து பெற்று செலவு செய்த பணத்தையும் மீளச் செலுத்துமாறு கீதாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment