ஞானசாரவுக்கு எதிராக சர்வதேசம் தழுவிய முறைப்பாடு

Fahmy Mohideen

தற்போது ஞானதேரோவின் செயற்பாடுகள் இலங்கையில் இனமுறுகலை ஏற்படுத்தி முஸ்லீம்களின் இருப்பை கேள்விக்கிறியாக்கி உள்ளது.குறிப்பாக புனிதமான ரமழான் மாதத்தை எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் மீண்டும் பூதமாக வந்திருக்கும் ஞானதார.

நாட்டின் சட்டமும் ,பாதுகாப்பு தரப்பும் அரசாங்கமும் எதுவிதமான நடவடிக்கையையும் எடுக்கமாட்டாது.இதற்கு அண்மைக்கால சம்பவங்களும் சான்றாக உள்ளது.

அதேநேரம் முஸ்லீம்கள் அரசாங்கம்,சட்டம் மற்றும் முஸ்லீம் தலமைகள் மீது நம்பிக்கை இழந்த நிலையில் சமூகத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் ஞானதாரவின் அடாவடித்தனத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது காலத்தின் அவசிய தேவையாகிவிட்டது.

ஆகவே அரசாங்கத்திற்கு அழுத்தத்தை பிரயோகிக்ககூடிய வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்படுகிறது.

தனிநபர் ஒருவரின் அராஜக மற்றும் இனவாதச் செயற்பாடுகளால் அமைதியான முழுச்சமூகம் பழியாக முடியாது. அதனை நல்லாட்சி மற்றும் ஐனநாயகத்தை பேசிக் கொள்ளும் அரசாங்கம் காட்டாட்சிக்கு துணைபோக முடியாது.

ஆகவே நாட்டிலும்,வெளிநாட்டிலும் வாழ்கின்ற சகோதரர்களை எமது முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

அந்தவகையில் ஊரிலும் வெளிநாட்டிலும் உள்ள சகோதரர்கள் உங்களால் இயன்றவரை
1)வெளிநாட்டு தொன்டு நிறுவனங்கள்
2)வெளிநாட்டுத் தூதுவராலயங்கள்
3)இலங்கை தூதுவராலயங்கள்
என்பவற்றுடன் தனியாகவும் குழுவாகவும் முயற்சித்து முறைப்பாட்டை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுங்கள்.

பின்னர் எங்களுடன் தொடர்பு கொண்டால் உங்களுக்கு முறைப்பாட்டு ஆவணம் வழங்கப்படும். மிகச் சுருக்கமாக தயாரிக்கப்பட்ட இந்த மனுவின் நோக்கம் பலருக்கும்,பலரால் ஒரேவிதமான முறைப்பாடு செய்வதாகும்

Mobile+Viber+Whatsapp
00447870763570

Comments