மற்றுமொரு சிலை நிர்மாணம்
Ihzana Fareed
பாலத்தில் இருந்து பார்த்தால் இது தெளிவாக தெரியும். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹ்மத், அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி ஆகியோரும் இணைத் தலைவர்களாக இருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் துறையடி புத்தர் சிலை நிர்மாணத்திற்கு உத்தியோக பூர்வ அனுமதி வழங்கப் பட்டது.
இனிவரும் காலங்களில் சமய சம்பந்தமான நிர்மாணங்கள் இடம்பெறும் பொது உரிய முன்அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன் தான் இந்த அனுமதி வழங்கப் பட்டதாக தெரிய வருகின்றது.
அப்படியானால் இப்போதைய புதிய நிர்மாணத்திற்கு உரிய அனுமதி பெறப் பட்டுள்ளதா? வழங்கியோர் யார்? என்ற விடயங்களையும் அவதானிக்க வேண்டுமே!


Comments
Post a Comment