சிலாவத்துறையில் மக்களது காணியை அளக்க முற்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு
தலைமன்னார் நிருபர்
சிலாவத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணியை நில அளவை செய்ய நில அளவையாளர்கள் முற்பட்டபோது மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் சிலாவத்துறை பகுதியில் பொது மக்களுக்கு உரித்தான காணிகள் என தெரிவிக்கப்படும் நிலங்களை திடீரென நில அளவையாளர்கள் நில அளவை செய்ய முற்பட்டபோது அவ்வூர் மக்கள் வீதியில் இறங்கி "எங்கள் நிலங்களை நில அளவை செய்ய வேண்டாம்" என கோரியும் சிலாவத்துறையில் பொது மக்களின் காணியில் இருக்கும் கடற்படையை அகற்ற கோரியும் ஆர்பாட்டம் செய்தனர்.
இச் சம்பவம் மன்னார் சிலாவத்துறையில் நேற்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட நில அளவைத் திணைக்களமும் முசலி பிரதேச காணி கிளையினரும் முசலி பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பகுதியிலுள்ள பொது மக்களுக்கு உரித்தான காணிகளை நில அளவை செய்ய முற்பட்டனர். இதன்போது சிலாபத்துறை பிரதேச மக்கள், வர்த்தக சங்க உரிமையாளர்கள் மற்றும் காணி மீட்பு குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து கடற்படை முகாமுக்கு முன்னால் பதாதைகள் ஏந்தியவர்களாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் இறங்கினர்.
அதாவது பொது மக்களின் நிலங்களில் நிலை கொண்டிருக்கும் கடற்படை முகாமை அகற்றக் கோரியும், அரச உடமையாக்குவதற்காக பொது மக்களின் காணிகளை நில அளவை செய்ய வேண்டாம் என கோரியே இவ் இப் போராட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
இது விடயமாக இவ் பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
சிலாவத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள காணி எங்களுடைய பாரம்பரிய காணியாக இருக்கின்றது. இதில் இலங்கை அரசாங்கத்தின் கடற்படையினர் அத்துமீறி முகாமை அமைத்து நிலை கொண்டு வருகின்றனர். இவற்றில் தமிழ் முஸ்லிம் களின் நிலங்களும் உள்ளன.
இது தொடர்பில் பல முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் எங்கள் பிரச்சினை தொடர்பில் இதுவரைக்கும் உரிய தீர்வினை பெற்று தரவில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்.
இவர்களின் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து நில அளவையாளர்கள் இது விடயமாக நீங்கள் பிரதேச செயலாளருக்கு ஆட்சேபனை கடிதம் தரும்படி கோரியதுடன் முசலி பிரதேச செயலகத்துக்குச் சென்று மக்கள் தங்கள் ஆட்சேபனை மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நில அளவை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு முசலி பிரதேச செயலாளருடன் இது விடயமாக கலந்துரையாடப்பட்டபின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment