ஜூலை மாதத்திலிருந்து தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பு..!
தனியார் பஸ் கட்டணங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
தனியார் பஸ் கட்டண சீர்திருத்தம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வருடாந்தம் இடம்பெறும் தனியார் பஸ் கட்டண சீர்திருத்தங்களுக்கு அமைவாகவே குறித்த கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளது. அதன் பிரகாரம் குறுந்தூர பஸ் கட்டணமான ஒன்பது ரூபா, பத்து ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும் ஏனைய கட்டண திருத்தங்கங்கள் சிறு தொகையினால் அதிகரிக்கப்படவுள்ளன.


Comments
Post a Comment