ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ரான முறைப்­பாடு : விசா­ர­ணை நாளை பூர்த்தி


2016 ஆம் வருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஹஜ்­ஜா­ஜிகள் தாம் பய­ணித்த ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சமர்ப்­பித்­துள்ள முறைப்­பா­டுகள் மீதான விசா­ர­ணைகள் நாளை புதன்­கி­ழமை நிறைவு பெற­வுள்­ள­தாக ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரிக்கும் குழுவின் செய­லாளர் ரபீக் இஸ்­மாயில் தெரி­வித்தார். 

ஹஜ் முறைப்­பா­டுகள் தொடர்­பான விசா­ர­ணைகள் பற்றி கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,  புதன்­கி­ழமை (நாளை) விசா­ர­ணைகள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்டு தயா­ரிக்­கப்­படும் அறிக்கை சில தினங்­களில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் கைய­ளிக்­கப்­படும். 

2016 ஆம் ஆண்டு ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய ஹஜ்­ஜா­ஜி­க­ளினால் 17 ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

விசா­ர­ணையின் போது குற்­ற­வா­ளி­க­ளாக நிரூ­பிக்­கப்­படும்ஹஜ் முக­வர்­க­ளுக்கு எவ்­வ­கை­யான தண்­டனை வழங்­கப்­படும் என்­ப­தையும் ஹஜ் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­குழு சிபா­ரிசு செய்யும். 

ஹஜ் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் தலை­வ­ராக ஓய்­வு­பெற்ற மேல்­ நீ­தி­மன்ற நீதி­ப­தியும் வக்பு ட்ரீபி­யு­னலின் தலை­வ­ரு­மான யு.எல்.ஏ.மஜீட் கட­மை­யாற்­று­வ­துடன் குழுவின் அங்­கத்­த­வர்­க­ளாக கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபைத்­த­லைவர் சட்டத்தரணி நத்வி பஹாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற நீர்வழங்கல், நகரத்திட்டமிடல் அமைச்சின் செயலாளர் மொய்னுதீன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.   

Comments