கிண்ணியா மேதினத்தில் மூன்று எம்பிக்களில் இருவரே பங்கேற்பு ஒருவரை காணவில்லை.
ihzana fareed
கிண்ணியாவிலும் இன்று (01) காலை மேதினம் நடைபெற்றது. இதன்போது கிண்ணியா உலமா சபை,மஸ்லிஜ் அஸ்ஷூரா உட்பட ஆறு சங்கங்கள் சேர்ந்து மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இதில் கிண்ணியாவில் உள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்,எம்.எஸ்.தௌபீக் இருவருமே கலந்து கொண்டனர்கள் மற்றொருவர் அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளவில்லை இதனால் கிண்ணியாவின் தொழிலாளர் உரிமைகளில் இவரின் அரசியல் பங்களிப்பு இல்லாத மாற்றுக்கொள்கை கொண்டவராக இளைஞர்கள் கருதுகின்றனர்கள்.
நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் உட்பசஙதொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்கள்.குறிப்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளாமை ஏற்பாட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு தனக்கு அமைச்சர் சஜீத் பிரமதாச அழைப்பு விடுத்தும் தான் அதனை புறக்கணித்துவிட்டு கிண்ணியா மேதினத்தில் பங்குகொள்வது உங்களை மதிக்கின்றேன் எனவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
இவ் நிகழ்வானது கிண்ணியா நகர சபை மைதானத்தில் இருந்து ஊர்வலமாக எழிலரங்கு மைதானம் வரை சென்றதுடன் ஊர்வலமாக அதன்பிற்பாடு கூட்டத்தையும் நடாத்தினர்.மேலும் இதில் உலமா சபை, சூரா சபை உறுப்பினர்கள் முன்னாள் நகர மேயர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் உட்பட பல சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்கள்.



Comments
Post a Comment