பெளத்த தந்திரத்துக்குள் மாயக்கல்லி

– றிசாத் ஏ காதர் –

கௌதம புத்தர் தனது சீடர்­க­ளுக்கு ஒரு­முறை உப­தே­சிக்கும் போது ஒருவர் புத்த தர்­மங்­களை முழு­வதும் கற்று மிக உரக்க ஓதி உப­தே­சித்­தாலும் அவர் அச்­சூத்­தி­ரங்கள் கூறு­கி­ற­படி நடக்­க­வில்­லை­யானால், பிற­ரு­டைய பசுக்­களைக் கணக்­கெண்ணிக் கொண்­டி­ருக்கும் இடை­ய­னை­யொப்ப, துற­விகள் அடைய வேண­டிய பலனை அவர் அடை­ய­மாட்டார் என்றார்.

பசுக்­களை கணக்­கெண்ணிக் கொண்­டி­ருக்கும் இடை­யனைப் போன்ற துற­விகள் பௌத்த மதத்தின் பெயரால் மாயக்­கல்லி விவ­கா­ரத்தில் வலம் வரு­வ­தனை பார்க்­கின்ற போது கௌதம புத்தர் இருந்­தி­ருக்கக் கூடாதா என்ற கேள்வி எழு­வ­தனை தவிர்க்க முடி­யாது.

இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலையில் வைக்­கப்­பட்ட சிலை விவ­காரம் தேசிய அர­சி­யலில் தற்­போது சூடு­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ளது. உண்­மை­யான, கௌதம புத்­தரை அடி­யொட்டி பின்­பற்­று­வோரால் இவை அரங்­கேற்­றப்­ப­ட­வில்லை என்பதை கௌதம புத்­தரின் போத­னை­களை வாசிக்கும் போது கண்­டு­கொள்­ளவும் முடி­கின்­றது.

வணங்­கு­வதற்கு யாரு­மற்ற ஒரு மலை­யுச்­சியில் 2016.10.29 ஆம் திகதி சிலை வைக்­கப்­பட்­டது. பின்பு மடா­லயம் ஒன்றை நிர்­மா­ணிப்­ப­துக்கு பல்­வேறு முயற்­சிகள் திரை மறைவில் அரங்­கேற்­றப்­பட்டு மெல்ல மெல்ல நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டும் வந்­தது. வைக்­கப்­பட்ட சிலையை அகற்றும் விடயம் தொடர்­பாக அர­சி­யல்­வ­ாதி­க­ளினால் இறக்­காமம் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் என்­பது காற்றில் கரைந்­தாற்போல் ஆயிற்று.

இறக்­காமம் மாயக்­கல்லி விவ­கா­ரத்தில் பூனைக்கு மணி கட்­டு­வது யார் என்­கின்ற கேள்­வி­யு­டனே ஒரு சாரார் வலம் ­வரத் தொடங்கினர். பெரும்­பான்மை சமூ­கத்தை பகைத்­துக்­கொள்ள முடி­யாது என்­கின்ற தோர­ணையில் வலம் வந்­தனர் இன்­னு­மொரு சாரார். சமூக நிறு­வ­னங்கள், மதஸ்­தா­ப­னங்கள் மௌனம் காத்­தன. மலையை அண்­டிய தனியார் காணி­களை கைய­கப்­ப­டுத்தி மடா­லயம் அமைக்கும் நட­வ­டிக்கை தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை அப­ரி­மி­த­மா­னது. அந்த நட­வ­டிக்கை என்­பது காலம் தாழ்த்தி செய்­யப்­பட்ட ஒன்­றா­கினும் வர­வேற்­கத்­தக்க ஒரு விட­யமே.

மாயக்­கல்லி மலை, காணி மீட்புக் குழு என்ற ஒன்றை நிறுவி அத­னூ­டாக அத்­தனை நட­வ­டிக்­கையும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அந்தக் குழு­வுக்கு செய­லா­ள­ராக இறக்­கா­மத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட சட்­டத்­த­ரணி பாறுக் சாஹிப் செய­லாற்­று­கின்றார்.

இவ்­வி­டயம் தொடர்­பாக தற்­போது மேற்­கொள்­ளப்­படும். நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக சட்­டத்­த­ரணி பாறுக் சாஹிப் தெரி­விக்­கையில், மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் மடா­லயம் கட்ட அனு­ம­திப்­பது என்­பது இறக்­காமம் பிர­தே­சத்தை சிங்­களப் பேரி­ன­வா­தத்­துக்கு தாரை­வார்த்துக் கொடுப்­ப­தற்கு சமம். இந்த நட­வ­டிக்கை அர­சி­ய­லுக்கு அப்பால் நின்று நமது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் போராடிப் பெற்றுத் தர­வேண்­டிய முதற் பணி என்றார்.

மாயக்­கல்லி மீட்பு குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கைக்கு கட்சி பேதங்­களை மறந்து அம்­பாறை மாவட்டம் மட்­டு­மல்ல முழு இலங்கை வாழ் முஸ்­லிம்­களும் ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும் என்றார். ஒத்­து­ழைக்­காமல் ஓரத்தில் நின்­று­கொ­ண்டால் இன்னும் ஐந்து அல்­லது பத்­து­வ­ரு­டங்­களில் பேரி­ன­வாதம் அம்­பாறை மாவட்­டத்தை முழு­மை­யாக ஆக்­கி­ர­மிப்புச் செய்யும் என்றார்.

மாயக்­கல்லி மலையில் சிலை வைக்­கப்­பட்டு ஆறு­மா­தங்­க­ளா­கி­விட்­டன. நட­வ­டிக்­கைகள் மந்­த­க­தியில் இருந்­த­மைக்கு காரணம் வின­வினோம். அதற்கு சட்­டத்­த­ரணி பாறுக் சாஹிப் சொன்ன விடயம் ஆச்ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்தியது. சமூக உணர்­வா­ளர்­களை தற்­கா­லத்தில் காண்­பது அரிது என்றார். அதி­க­மானோர் தானும் தனது பாடும் என்று இருந்­து­வி­டு­கின்­றனர்.

இந்தப் போக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இது சமூகப் போராட்டம். இதில் பார்­வை­யா­ளர்­க­ளாக இருந்­து­விட்டுச் செல்ல முடி­யாது. மாயக்கல்லி மலை மீட்பு பணியில் தங்­க­ளது உயிர் போனாலும் பர­வா­யில்லை, என்­கின்ற இறை நம்­பிக்­கை­யோ­டுதான் இந்தக் குழு களத்தில் இறங்­கி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்டார்.

அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­பரை சந்­தித்து இது தொடர்­பான சட்டரீதி­யான ஆவ­ணங்கள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், நாட்­டி­லுள்ள முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை சந்­தித்து விட­யங்­களை தெளி­வு­ப­டுத்தும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், அதன்­பின்னர் ஆட்சித் தலை­வர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார் சட்­டத்­த­ரணி பாறுக்.

சிலை வைக்­கப்­பட்­டுள்ள மாயக்­கல்லி மலை 2014.10.10 ஆம் திகதி வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு கைய­ளிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த மலையை சுற்றி 24 பேருக்கு 1990.08.30ஆம் திகதி காணி கட்­டளை அபி­வி­ருத்திச் சட்ட உறு­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதனால் இக்காணி­களை தவிர்த்தே தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு வர்த்­த­மானி அறி­விப்புச் செய்­யப்­பட்­டுள்­ளதும் குறிப்­பி­டத்­தக்­கது.

தொல்­பொருள் திணைக்­களம், காணிச் சொந்­தக்­கா­ரர்கள் இருக்­கத்­தக்க மூன்றாம் நபர்கள் அதுவும் வெளி­மா­வட்­டங்­களில் இருந்து வருகை தந்து சிலை வைப்பது என்­பது மிக்க ஆபத்­தான விட­யமே. நீதி­மன்ற தடை­யுத்­த­ரவு பெறப்­பட்­டுள்ள வேளையில் பௌத்த துற­விகள் அத்­து­மீறி தங்­க­ளது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது நீதித்­து­றையை அலட்­சியம் செய்யும் ஒரு விட­ய­மா­கவே பார்க்­கப்­படல் வேண்டும். இந்த நிலை ஆபத்து மிக்­க­து.

இறக்­காமம் மாயக்­கல்லி விவ­காரம் என்­பது சாத­ரணமா­ன­தல்ல. இதனை சரி­யாகப் புரிந்து கொள்­வது அர­சி­யல்­வா­தி­களின் கடமை. இத­னு­டைய ஆழ அகலம் என்­பது வித்­தி­யா­ச­மான ஒன்று. இந்த உபா­யங்­க­ளுக்கு எதிர் உபா­யங்­களை வகுக்கக் கூடி­ய­வர்­க­ளா­கவே நமது அர­சியற் தலை­வர்கள் செயற்­ப­டுதல் வேண்டும். நாடா­ளு­மன்ற எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தர் ஐயாவை இணைத்­துக்­கொண்டு ஸ்ரீல.மு.காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ஹக்கீம் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து, தொளி­வு­ப­டுத்­தி­ய­தா­கவும் சாத­க­மான பதில் வழங்­கப்­பட்­ட­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி என்ன சொன்னார். சிலை அகற்­றப்­ப­டுமா அல்­லது மடா­லயம் நிர்­மா­ணிக்­கப்­ப­டாதா என்­கின்ற உத்­த­ர­வாதம் பெறப்­பட்­டதா என்­கின்ற கேள்­வி­க­ளுக்கு பதில் இன்­னு­மில்­லா­ம­லுள்­ளது.

நல்­லாட்சி அரசை ஆட்­சிக்கு கொண்­டு­வந்­த­வர்கள் என்­கின்றோம். ஆனால் இறக்­காமம் மாயக்­கல்லி சிலை விவ­கா­ரத்­துக்கு ஒரு வாரத்­துக்கு தீர்வு பெற்றுத் தரப்­படும் என்று சொல்லி ஆறு­மா­தங்கள் கடந்து விட்­டன. அர­சியல் ரீதி­யாக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் என்ன.
இறக்­காமம் மாயக்­கல்லி விவ­கா­ர­மாக அம்­பாறை மாவட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­ட­மொன்றை கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடாத்­தி­யி­ருந்­தனர்.

கிழக்­கு­ மா­காண சபையின் முத­ல­மைச்சர் ஒரு விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். கிழக்கு மாகா­ண­ச­பையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும், இந்த நட­வ­டிக்­கை­களை ஆராய மாகாண சபை குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ள­தாகக் குறிப்­பிட்டார். அத்­துடன் இக்­கு­ழுவின் முடி­வுக்கு முன்னர் ஏதா­வது நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வது யாப்­பிற்கு முரண் என்றும் அவ்­வாறு யாரா­வது நடந்­து­கொண்டால் சட்டம் அவ்­வா­றா­ன­வர்­களை தண்­டிக்கும் என்றார்.

முத­ல­மைச்­சரின் சொந்த மாவட்­ட­மான மட்­ட­க்க­ளப்­புக்கு பொது­பல சேனா­வி­னு­டைய பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் வருகை தரு­வதை நீதி­மன்றம் தடை செய்­தது. அதற்­கான தடை­யுத்­த­ரவும் ஞான­சா­ர­ரு­டைய கையில் வழங்­கப்­பட்­டது. அவ்­வாறு வழங்­கப்­பட்ட நீதி­மன்ற உத்­த­ரவு பொலிஸ் உயர் அதி­கா­ரி­களின் கண்­முன்னே கிழித்து வீசி­யு­மி­ருந்தார். அதற்கு இந்த நாட்டில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை தான் என்ன? இதனை பாட­மாகக் கொள்­வது இவ்­வி­டத்தில் பொருத்­த­மா­க­வி­ருக்கும். ஏனெனில், அதே ஞான­சா­ரரின் விஜ­யமே இங்கு அச்­சத்தை மேலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எதிர்வரும் வெசாக் தினத்தினை மாயக்கல்லி மலையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஞானசாரா தனது சீடர்களுக்கு உத்தரவிட்டுச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலைமைகளில் நமது அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை தவிர்த்து உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்தல் வேண்டும்.

அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகளும் பகிஷ்கரிக்க வேண்டும். மாயக்கல்லி விவகாரத்துக்கு தீர்வு கிடைக்க அதிகாரத்திலுள்ள கிழக்கு மாகாண சபையின் அமர்வுகளை காலவரையறையின்றி ஒத்திவைத்தல் வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் மாத்திரமே இந்த அரசாங்கத்துக்கு செல்லுபடியானதாக அமையும். இல்லையேல் இறக்காமம் மாயக்கல்லியில் ஏலவே தனித்திருந்த புத்தரோடு சீடர்கள் என்று நம்பியுள்ள இடையர்களின் ஆக்கிரமிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவிடும்.

Comments