எயிட்ஸ் இரத்த ‘வதந்தி’யை நம்ப வேண்டாம்: சு.சே. பணிப்பாளர்


சுகாதார சேவை அதிகாரிகளால் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனையைத் தவறான முறையில் சித்தரித்து பரப்பப்படும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார.

குறித்த குறுஞ்செய்தியில் இலவச இரத்த பரிசோதனை என வந்து, ஐ.எஸ். அமைப்பினர் எயிட்ஸ் இரத்தத்தை உடம்பில் செலுத்துவதாகவும் இதனால் இரவில் இரத்த பரிசோதனைக்காக வருவோரை பொலிசில் பிடித்துக் கொடுக்குமாறும் குறித்த தகவல் பரப்பப்படுகிறது.

இந்நிலையிலேயே இது குறித்து விளக்கமளித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார சேவை ஊழியர்கள் சீருடையில், தமது அடையாள அட்டைகளுடனேயே இரத்த பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குறுஞ்செய்தி:

Comments