மூன்று தினசரி பத்திரிகைகளில் முன் பக்கத்தில் பொது மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் – நீதவான் மருந்தக உரிமையாளருக்கு உத்தரவு
மூன்று தினசரி பத்திரிகைகளில் முன் பக்கத்தில் பொது மக்களிடம் மன்னிப்புக்கோருமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் மருந்தக (பாமசி) உரிமையாளருக்கு நேற்று (09) கட்டளை பிறப்பித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்கு படுத்தும் அதிகார சபையின் திருகோணமலை பிராந்திய உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களினால் மருந்தகங்கள் சுற்றிவளைக்கப்பட்ட போது குற்றங்கள் சுமத்தப்பட்டவரொருவரின் வழக்கு விசாரணை இடம் பெற்ற போதே நீதவான் இக்கட்டளையை பிறப்பித்தார்.
அதிகார சபையினால் உரிமம் பெறாமல் மருந்தகத்தை நடாத்தியமை.மருந்தாளர் அல்லாதவரினால் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டமை.காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக வௌிக்காட்டி வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் மருந்நக (பாமசி) உரிமையாளருக்கு சுமத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான தவறுகள் இனிமேலும் நடை பெறாமல் இருப்பதற்காக வேண்டி தினசரி மூன்று பத்திரிகைகளிலும் முன் பக்கத்தில் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அப்பத்திரிகையின் பிரதிகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
இச்சம்பவம் கிண்ணியா பகுதியைச்சேர்ந்த பாமசி உரிமையாளருக்கே இடம் பெற்றுள்ளது.


Comments
Post a Comment