குவைத்தில் விபச்சார விடுதி நடத்திய இலங்கை ஆண் மற்றும் பெண் சிக்கினர்.


குவைட் நாட்டில் விபச்சார விடுதியொன்றை நடாத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கையர் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளதாக அரபு நாட்டு செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த நாட்டுக்கு வேலைக்குச் சென்ற பெண் ஒருவரையும், ஆண் ஒருவரையுமே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபச்சார விடுதிக்கு ஆட்களை அழைத்துவருவது இந்த சந்தேக நபரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. D C

Comments