தனது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் நீரில் மூழ்கியவரை பாய்ந்து காப்பாற்றிய பிக்கு!
பதுளை – உட கொஹோவில விகாரையில் வசிக்கும் வேஹெரயாயே விமலசார தேரர் நீரில் மூழ்கிய நபரொருவரை காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், தேரர் காப்பாற்றியுள்ள விதம் தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
ஜயகங்கையில் நபரொருவர் நண்பர்களுடன் நீராட சென்றுள்ளார். நீராடும் போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த தேரர் கடும் முயற்சியின் பின்னர் குறித்த நபரை காப்பாற்றியுள்ளார். இதனை ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார்.


Comments
Post a Comment