வடக்கு மாகாணசபையின் ஆளுதரப்பு முஸ்லிம் பிரதிநிதித்துவம்; இல்லாமல் செய்யப்படமாட்டாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி.
n.m. abdullah
வடக்கு மாகாணசபையின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறித்து விஷேட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் (16-05-2017) யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு செயற்குழுவின் மாவட்டப் பிரதிநிதிகளும், யாழ் மாவட்ட முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளும்; வடக்கு முஸ்லிம்கள் சார்பாக கலந்துகொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் கௌரவ மாவை சேனாதிராஜா (பா.உ), மற்றும் தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களுள் ஒருவரும் வடக்கு மாகாணசபையின் பேரவைத் தலைவருமாகிய கௌரவ சி.வி.கே.சிவஞானம் அவர்களும் கலந்துகொண்டனர்.
மேற்படி சந்திப்பின்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை தற்போதைய உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களை மீளழைத்தல் தொடர்பில் தீர்மானித்திருக்கின்றது; இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் ஆளும்தரப்பு முஸ்லிம் பிரதிநிதித்துவம் எவ்வாறு உறுதி செய்யப்படும்; என்ற விடயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தெளிவினை வழங்கவேண்டும் என்று வடக்கு முஸ்லிம் பிரதிநிதிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கௌரவ மாவை சேனாதிராஜா (பா.உ) அவர்கள். நல்லாட்சி இயக்கத்திற்கும் எமக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவன் நானே; எனக்குத் தெரிந்த வகையில் குறித்த ஒப்பந்தத்தில் மீளழைத்தல் தொடர்பிலோ அல்லது குறித்த உறுப்புரிமை நல்லாட்சி இயக்கத்திற்கு மாத்திரம் உரித்தானது என்றோ குறிப்பிடப்படவில்லை; அது வடக்கு முஸ்லிம் மக்களுக்கான உறுப்புரிமையாகும். எனினும் ஒப்பந்தம் குறித்து நாம் மீளாய்வு செய்யவேண்டியுமிருக்கின்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அவர்களது பிரதிநிதியைப் பதவி விலகக் கோருவதற்கு; ஒரு கட்சி என்ற ரீதியில் அவர்களுக்கு முழுமையான உரித்து இருக்கின்றது. ஆனால் அந்தப் பிரதிநியை நீக்குமாறு அவர்கள் எங்களைக் கோர முடியாது. அவர் இராஜினாமா செய்கின்ற பட்சத்தில் யாரை மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் கூறுவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கப்போவதில்லை. அவர்களுடைய பிரதிநிதி ராஜினாமா செய்தால் எங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான ஒப்பந்தம் இரத்தாகிவிடும். எனவே ஒப்பந்தம் இரத்தாகிய பின்னர் இவரை நியமியுங்கள் அவரை நியமியுங்கள் என அவர்களால் கூறமுடியாது. அஸ்மின் அவர்களை இராஜினாமா செய்யவேண்டாம் என்று நாங்களும் கூறமாட்டோம்; அது அவர்களது கட்சிசார்ந்த விடயம். ஆனால் உங்களுக்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதி தேவை என்றால் அஸ்மின் இராஜினாமாச் செய்வதை நீங்களே தடுக்கவேண்டும். அது வடக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் என்றவகையில் உங்களது பொறுப்பாகும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு எவ்வித முரண்பாடுகளும் எமக்குக் கிடையாது; அரசியல் ரீதியாக வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் அவர்களோடும் நாம் இணைந்தே செயற்படவிரும்புகின்றோம். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளோடும் இணைந்தே நாம் செயலாற்ற விரும்புகின்றோம். வடக்கு முஸ்லிம் மக்களும்; முஸ்லிம் அரசியல் அமைப்புகளுடன் இணைந்திருப்பதையே நாம் விரும்புகின்றோம். நீங்களும் நல்லாட்சிக்கான இயக்கத்தோடு பேசுங்கள்; அவர்களுக்கு நிலைமைகளைப் புரியவையுங்கள்; என்று கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
கௌரவ உறுப்பினர் அஸ்மின் அவர்களை நீக்குவதற்கோ அல்லது இராஜினா செய்யுங்கள் என்று கோருவதற்கோ சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வித அவசியமும் கிடையாது; அதேபோன்று அவருடைய இடத்திற்கு இன்னுமொரு முஸ்லிம் உறுப்பினரை நியமிப்பதற்கும் எவ்வித சட்ட ஏற்பாடுகளும் கிடையாது. இவ்வாறான சூழலில் அஸ்மின் அவர்கள் இராஜினாமா செய்தால் அந்த இடத்தில் இன்னுமொரு முஸ்லிம் உறுப்பினரை நியமிக்க முடியாது என்பது மிகவும் திட்டவட்டமானது. என்று வடக்கு மாகாணசபையின் பேரவைத்தலைவர் கௌரவ சீ.வி.கே.சிவஞானம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இக் கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட வடக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் கௌரவ அஸ்மின் அய்யூப் அவர்கள் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யக்கூடாது, என்று அவரிடம் கோருவதுடன்; நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தன்னுடைய தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும், என்று கோருதல் என்றும் தீர்மானித்தனர். அத்தோடு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாண செயற்குழு தொடர்ந்தும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு இணைந்து செயலாற்றுவதா அல்லது வடக்கு முஸ்லிம் மக்களின் நலன் கருது மாற்றுத் தீர்மானங்களுக்குச் செல்வதா என்பது குறித்தும் விரைவில் தீர்மானிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
தகவல் எம்.எல்.லாபிர்

Comments
Post a Comment