கசிப்பு சாராயம் தயாரிப்பதற்கு பயன் படும் இரண்டு பரல் கசாதம் மீட்டு

  -Ihzana Fareed

திருகோணமலை  கிண்ணியா பொலிஸ் பிரிவில் கண்டல் காடு ஆற்றுக் கரைச்சை பகுதியில்  கசிப்பு சாராயம் வடிப்பதற்கு பயன் படும் செயற்கைப் பொருள் கசாதம் இரண்டு பரல்  திருகோணமலை பிராந்திய விசத்தன்மையான  போதைப்பொருள்  பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இச் சம்பவம் நேற்று மே (01) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

 இச் சம்பவம் தொடர்புடையவர்கள் தங்களைக் கண்டு  தப்பித்து விட்டதாகவும் ஒருவரும் கைது செய்யப் படவில்லை யெனவும் 
 மீட்கப்பட்ட பரல் ஒன்றில் இருந்து  180 லீற்றர் கசாதமும் மற்றொன்று பரலிலிருந்து 175 லீற்றர் கசாதமும் அதற்குத் தேவையான  ஏனைய பொருட்களும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த இரகசிய  தகவலை அடுத்து  இப் விசப் பொருட்களை மீட்டதாகவும் விசத்தன்மையுடைய போதைப் பொருள்   பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி  ஜனேஸன். தெரிவித்தார்.

இப் பொருட்கள் கிண்ணியா பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Comments