தாக்­கு­தல்கள் கட்டுப்பாட்டில் : அரசும் பொலி­ஸாரும் பொறுப்பு என்­கிறார் அமைச்சர் சாகல

- பாராளுமன்ற செய்தியாளர்கள்  -
அண்மைக் கால­மாக இடம்­பெற்­று­வரும் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான உடை­மைகள் தீயி­டப்­பட்ட சம்­பவங்­க­ளுக்கு  அர­சாங்­கமும் பொலி­ஸாரும் பொறுப்புக் கூற­வேண்டும்.

பள்­ளி­வாசல் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­பட்ட சம்­வங்­க­ளுக்­கான விசா­ரணை நடை­பெ­று­கின்­றது. குற்­ற­வா­ளி­களை இனங்­காண ஓரிரு நாட்கள் அவ­காசம் வேண்டும் என்று   சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க சபையில் தெரி­வித்தார்.

மேலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­கு­தல்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

 பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை  23 கீழ் 2 நிலை­யியற் கட்­ட­ளையின் கீழ் அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி. எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
தற்­போது நாட்டில் மீளவும் இன­வாதம் தோன்­றி­யுள்­ளது. இன­வாத கார­ண­மாக ஏற்­பட்ட யுத்­தத்தின் கார­ண­மாக நாம் பல்­வேறு துன்­பங்­களை எதிர்­கொண்டோம். அதனை எம்மால் மறக்­க­மு­டி­யாது. பிரித்­தா­னி­யாவில் நேற்று முன்தினம் ஏற்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்தின் ஊடாக எமக்கு இலங்கை கடந்த காலங்கள் முகங்­கொ­டுத்த பிரச்­சினை நினை­வுக்கு வரு­கின்­றது. 

இந்­நி­லையில் தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் தாக்­கு­தல்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்ளோம். இந்தப் பிரச்­சினை அர­சாங்­கத்­தின் குறை­பாடுகளால் நிகழ்ந்­துள்­ள­மையை நாம் ஏற்­கின்றோம். இந்த சம்­ப­வங்­க­ளுக்கு அர­சாங்­கமும் பொலி­ஸாருமே பொறுப்புக் கூற­வேண்டும்.

பொலிஸார் சட்­டத்தை உரிய முறையில் நிலை­நாட்ட வேண்டும். பொலி­ஸாருக்கு இனம்,மதம் என்­பது இல்லை. சட்­டத்தை சீர்­கு­லைப்­ப­வர்கள் எவ­ராக இருப்­பினும் இன, பேதம் பாராமல் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். 

நாட்டு மக்கள் அச்­ச­மில்­லாமல் வாழ வேண்டும். அதற்­கான சூழலை நாம் ஏற்­ப­டுத்த வேண்டும். மீளவும் நாட்டில் யுத்தம் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. 

பள்­ளி­வாசல் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­பட்ட சம்ப­வங்­க­ளுக்­கான விசா­ர­ணைகள் தற்­போது நடைபெ­று­கின்­றன. குற்­ற­வா­ளி­களை இனங்­காண மூன்று நாள் கால அவ­காசம் வேண்டும். அத்­துடன் கஹ­வத்தை வர்த்­தக நிலை­யத்தில் தீ மூண்­டது ஒரு விபத்­தாகும். கஹ­வத்­தையில் விபத்தின் கார­ண­மாக ஏற்­பட்ட தீயா­னது பக்­கத்திலிருந்த முஸ்லிம் ஒரு­வரின் கடைக்கும் பர­வி­யுள்­ளது.அத்­துடன்  எல்­பிட்­டிய சம்­பவம் ஒரு திருட்­டாகும்.

கொள்­ளை­யிட சென்ற போது ஏற்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.எனினும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடாக கணக்கில் போடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன  என்றார்.

Comments