கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 2017/2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21.05.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி வருடாந்த பொதுக் கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர் சங்க உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சங்கத்தில் ஏற்கனவே அங்கத்துவம் பெற்றிருத்தல் வேண்டும். அல்லது கூட்டம் நடைபெறும் அன்றைய தினத்திலும் அங்கத்துவ படிவத்தினை பூரணப்படுத்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியுமென பழைய மாணவ சங்கத்தின் செயலாளர் பொறியியளாளர் எம்.சி. கமால் தெரிவித்தார்
யூ.கே. காலித்தீன்
ஊடக இணைப்பாளர்
பழைய மாணவர் சங்கம் ஸாஹிராக் கல்லூரி கல்முனை


Comments
Post a Comment