மகிந்த ராஜபக்சவின் மே தினக் கூட்ட நெரிசலில் இருவர் மரணம்


காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆதரவாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணம் சம்பவித்தமைக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments