கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு : நடந்தது என்ன?

-விடிவெள்ளி

10 இலட்சம் ரூபா கப்பம் கொடுக்­கப்­பட்டு சிறுவன் மீட்­கப்­பட்­டதன் பின்பு பொலி­ஸா­ரினால் அப் பணமும் மீட்­கப்­பட்­டுள்­ளது. சம்­பந்­தப்­பட்ட இரு பெண்­களும், இளைஞன் அசாமும் கம்­பளை பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கடத்­தப்­பட்ட சிறு­வனின் தந்தை ரிபாஸ் சம்­பவம் தொடர்பில் “விடி­வெள்­ளிக்கு” இவ்­வாறு விப­ரித்தார்.

எனது மகன் கடந்த 3 ஆம் திகதி பிற்­பகல் கடத்­தப்­பட்டார். எனது மைத்­து­ன­ரான மொஹமட் அசா­முடன் சேர்த்தே அவர் கடத்­தப்­பட்டு விட்டார் என்றே நாங்கள் நம்­பினோம். இரு­வரும் கடத்­தப்­பட்டு விட்­ட­தா­கவே கம்­பளை பொலிஸில் முறைப்­பா­டொன்­றி­னையும் பதிவு செய்தோம்.

கடத்­தப்­பட்ட கடந்த 3 ஆம் திக­தி­யி­லி­ருந்தே என்­னிடம் கப்பம் கேட்டு தொலை­பேசி அழைப்­புகள் கிடைத்­தன. குறுந்­த­க­வல்­க­ளையும் அனுப்பி வைத்­தார்கள். தொடர்ந்து வந்த தொலை­பேசி அழைப்­புகள் சில மணித்­தி­யா­லயம் நிறுத்தி வைக்­கப்­பட்­டன.

அடுத்த தினம் காலை ஒன்­பது மணிக்கு தொடர்பு கொண்­டார்கள். இரு­வ­ரையும் விடு­விப்­ப­தற்கு 30 இலட்சம் கப்பம் வேண்­டு­மென்று தொலை­பே­சி­யி­னூ­டாக தெரி­வித்­தார்கள். 30 இலட்சம் தர முடி­யாது 10 இலட்சம் தரு­கிறேன் என்று தெரி­வித்தேன். பின்பு மீண்டும் தொலை­பேசி மூலம் 30 இலட்சம் தர வேண்டும் என்­றார்கள். 10 இலட்­சமே தர முடியும் என்று மீண்டும் கூறினேன்.

பின்பு மக­னுடன் சேர்ந்து காணாமற் போன எனது மைத்­துனர் மொஹமட் அசாமை பேச வைத்­தார்கள். அவர் “என்னை வைத்தே இந்த டீலை செய்­கி­றார்கள்” என்றார். பின்பு நாங்கள் லொக்­கு­வா­வையே அனுப்­புவோம். சிறி­ய­வனை வைத்துக் கொள்வோம். கொழும்பில் 15 இலட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என்­றார்கள். லொக்­குவா என்று கூறி­யது என் மைத்­துனர் மொஹமட் அசா­மை­யாகும்.

கடந்த 4 ஆம் திகதி எனது கைய­டக்க தொலை­பே­சிக்கு ஓர் அழைப்பு வந்­தது. அது மொஹமட் அசா­மி­னது அழைப்பு. இரவு 11 மணி­யி­ருக்கும். தான் கண்­டிக்கு வந்து சேர்ந்­துள்­ள­தா­கவும் மறு­தினம் அதா­வது 5 ஆம் திகதி அதி­காலை 4 மணிக்கு எங்­களை மரு­தா­னைக்கு வரும் படியும் கூறினார்.

மரு­தா­னைக்கு அதி­காலை 4 மணிக்கு குறிப்­பிட்ட இடத்­திற்கு வந்து சேர்ந்தோம். மரு­தா­னையில் பைக் ஒன்று நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்கும் இடத்­திற்கு நானும் நீங்­களும் மாத்­திரம் போக­லா­மென்றும் கூறினார்.

மரு­தா­னையில் அவர் குறிப்­பிட்ட இடத்­திற்கு இரு­வரும் சென்றோம். ஆனால் அங்கு பைக் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. பின்பு மெயின் ஸ்ட்ரீட்­டுக்கு முச்­சக்­கர வண்­டியில் போவோம். கடத்தற் காரர்கள் அங்கு இருப்­பார்கள் என்றார். பின்பு சம்மான் கோட்டு பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் இரண்டு பேர் இருப்­பார்கள். அவர்கள் அங்கு இல்­லா­விட்டால் நாங்கள் கல்­மு­னைக்­குத்தான் செல்ல வேண்டும் என மொஹமட் அசாம் (சிறு­வ­னுடன் காணாமற் போய் திரும்பி வந்த இளைஞன்) கூறினார்.

மொஹமட் அசா­முக்குத் தெரி­யாமல் பொலிஸ் அதி­கா­ரிகள் குழு­வொன்று சம்­ப­வங்­களைக் கண்­கா­ணித்துக் கொண்­டி­ருந்­தது. இந்த குழு கொழும்­பி­லி­ருந்து சிவில் உடையில் எம்மை பின்­தொ­டர்ந்து வந்­தி­ருந்­தது.

குறிப்­பிட்ட இரு­வரும் அங்கு இருக்­க­வில்லை. அன்று சம்மான்கோட்டு பள்­ளி­வா­சலில் சுபஹு தொழுதோம். எம்­முடன் வந்த பொலிஸ் குழு வாக­னத்­தி­லேயே இருந்­தது. ” ரிபாஸ் நானா ஏதும் தாறு­மா­றாக நடந்தால் என் உயி­ருக்கு ஆபத்து. அதனால் கடத்­தல்­கா­ரர்கள் சொல்­வது போல் நடந்து கொள்­ளுங்கள்” என்றார் மொஹமட் அசாம். எனக்கு எனது பிள்ளை வேண்டும். பணம் தரு­வதில் பிரச்­சினை இல்லை என்றேன். புறக்­கோட்­டையில் பல இடங்­க­ளுக்கும் எம்மை அழைத்துச் சென்றார்.

பிள்­ளையை கொண்டு வந்து விட்­டதன் பின்பு 15 இலட்சம் கொடுக்க முடியும் என்­றவர் 10 ஆயிரம் ரூபா பணத்­தையும் பெற்­றுக்­கொண்டு எனது மனை­வியின் தந்­தை­யுடன் போக வேண்டும் 5 மணித்­தி­யா­ல­யங்கள் செல்லும் என்றார். பின்பு கல்­முனை பஸ் நிறுத்­து­மி­டத்­திற்குச் சென்றார்.

எல்லா சம்­ப­வங்­க­ளையும் அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்த சிவில் உடையில் இருந்த கம்­பளை பொலிஸ் அதி­கா­ரிகள் மைத்­துனர் மீது சந்­தே­கப்­பட்டு அவரை மாளி­கா­வத்­தையில் இருந்த வீடொன்­றிற்கு அழைத்துச் சென்று இரவு 7.30 மணி­யி­லி­ருந்து 10.30 மணி­வரை மொஹமட் அசாமை விசா­ரணை செய்­தார்கள். அவர் உண்­மை­யான விப­ரங்­களைத் தெரி­விக்­க­வில்லை. கல்­மு­னைக்கு போக வேண்டும் என்றே கூறினார். பொலிஸார் கொழும்பில் அவர்­க­ளது காரி­யா­ல­ய­மொன்­றுக்கும் அழைத்துச் சென்று அசாமை விசா­ரித்­தார்கள்.

பின்பு கைய­டக்க தொலை­பே­சிக்கு அழைப்பு வந்­தது. அசா­மிடம் 15 இலட்சம் ரூபாவும் கைய­டக்க தொலை­பே­சி­யையும் கொடுக்கும் படி தெரி­விக்­கப்­பட்­டது.

4 ஆம் குறுக்குத் தெரு, பீபல்ஸ் பார்க் என்று பல இடங்­க­ளுக்கும் அழைத்துச் சென்றார். கடத்தல் காரர்கள் தாம் கூறு­வது போன்று நடந்து கொள்­ளா­விட்டால் பிள்­ளையை பெக் பண்ணி அனுப்­பு­வ­தாக தொலை­பே­சியில் அச்­சு­றுத்­தி­னார்கள். நாங்கள் இரவு 8 மணி­வரை மாளி­கா­வத்தை மைய­வா­டியில் தங்­கி­யி­ருந்தோம்.

யாரும் எங்­களைப் பின் தொடரக் கூடாது. நாங்கள் கல்­முனை போவோம் என்றார். நாங்கள் ஒரு வாக­னத்­திலும் பொலிஸ் குழு மற்­றொரு வாக­னத்­திலும் கல்­மு­னைக்குச் சென்றோம். பின்னர் கல்­மு­னை­யி­லி­ருந்து செங்­க­ல­டிக்குச் சென்றோம்.

செங்­க­லடி சந்­தியில் இறங்கி அசாம் உறுகாமத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். சந்­தி­யி­லி­ருந்து 1 ½ கிலோ­மீட்டர் சென்றோம். போகும் போது 10 இலட்சம் ரூபா முத­லிலும் பிறகு 5 இலட்சம் ரூபாவும் கொடுப்போம் என்றார். அங்கு சென்­றதும் வாக­னத்­தி­லி­ருந்து இறங்கிச் சென்றார். என்னை இறங்க வேண்டாம் என்றார்.

நான் கொடுத்த 10 இலட்சம் ரூபாவை ஒரு வீட்­டுக்குள் சென்று கொடுத்தார். அதன் பின் எனது பிள்­ளையைக் கூட்டி வந்தார். எந்த வீட்­டி­லி­ருந்து கூட்டி வந்தார் என்­பதை நான் காண­வில்லை.

பொலிஸார் அந்த சுற்றுப் புறத்­தி­லேயே இருந்­தார்கள். பின்பு நான் பிள்­ளையைக் கூட்டிக் கொண்டு செங்­க­ல­டிக்கு வந்து சேர்ந்தேன். 
பொலிஸார் அசாமைக் கூட்­டிக்­கொண்டு கர­டி­ய­னா­றுக்குச் சென்­றார்கள். பிள்­ளையை நான் எனது குடும்­பத்­தா­ரிடம் கொடுத்து விட்டு பொலி­ஸா­ருடன் கர­டி­ய­னா­றுக்கு சென்றேன்.

பிள்­ளையை வைத்­தி­ருந்த வீட்டில் ஒரு வயோ­திபப் பெண்ணும் இன்­னொரு பெண்ணும் 8 வயது மதிக்­கத்­தக்க பெண் பிள்­ளையும் இருந்­தார்கள். நான் கொடுத்த 10 இலட்சம் ரூபா ஆட்டு மடு­வத்­தி­லி­ருந்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டது. அது சிறிய வீடு. எனது பிள்­ளையை ஆட்டு மடு­வத்­திலே வைத்­தி­ருந்­தார்கள். அந்த வீடு காத்தான் குடியை சேர்ந்த ஒரு­வ­ருக்குச் சொந்­த­மா­னது என தெரி­விக்­கப்­பட்­டது.

அசாமின் சகோ­தரர் ஒரு­வரும் இச்­சம்­ப­வத்தில் சம்­மந்­தப்­பட்­டி­ருக்­கிறார். அவ­ரது பாஸ்போர்ட் அந்த வீட்­டி­லி­ருந்தே கிடைத்தது.

இது போன்ற அநியாயம் வேறு எந்த குடும்பத்துக்கும் இழைக்கப்படக் கூடாது. நான்கு நாட்கள் எனது உயிரான மகனை வைத்துக்கொண்டு நாடகமாடியிருக்கிறார்கள். அதுவும் எனது உம்மாவின் நானாவின் மகனான அசாம் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்.

எனது பிள்ளைக்காக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மாத்திரமல்ல, பன்சலைகள், கோயில்கள் என்பனவற்றிலும் பிரார்த்தனைகள் இடம் பெற்றன. அனைவருக்கும், கம்பளை பொலிஸாருக்கும் சம்மந்தப்பட்ட ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றார்.

.

Comments