எந்தவொரு தேர்தலுக்கும் சவாலுக்கும் நாம் தயார்


மேதின உரையில் பிரதமர் ரணில் சூளுரை
இந்த வருடத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு தேர்தலுக்கும், சவால்களுக்கும் முகம்கொடுக்க தயாராகவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூளுரைத்தார். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மே தின பிர­தான கூட்டம் நேற்று பொரளை கெம்பல் பார்க் மைதா­னத்தில் நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்றும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,
ஐக்­கிய தேசியக் கட்­சியின் மே தின கூட்­டத்­திற்கு வருகை தந்த மக்கள் கூட்­டத்தை பார்த்­த­வுடன் இந்த வருடம் எந்த தேர்­தலை நடத்­தி­னாலும் அதற்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு நாம் தயா­ராக உள்ளோம் என துணிவுடன் கூறலாம். எமது வெற்றி ஊர்­ஜி­த­மாகி விட்­டது.
2016 ஆம் ஆண்டு ஆட்­சியை கவிழ்ப்­ப­தாக கூறினர்.

எனினும் தற்­போது 2016 ஆம் ஆண்டு முடி­வ­டைந்து விட்­டது. அவர்கள் ஆட்­சியில் உள்­ளார்­களா? இல்­லையே. தற்­போது இந்த ஆட்­சியை வெசாக் போயா தினத்தின் பின்னர் கவிழ்ப்­ப­தாக கூறு­கின்­றனர். நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். இரு தசாப்­தங்கள் சென்­றாலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அணி­யி­ன­ருக்கு ஆட்­சிக்கு வர­மு­டி­யாது.

இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் முடி­யாமல் போனது. இதன்­கா­ர­ண­மா­கவே அவர் தேர்­தலை நடத்­தினார். 

தற்­போது நாம் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பி வரு­கின்றோம். ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை எமக்கு மீள கிடைக்­க­பெற்­றுள்­ளது. முன்­னைய ஆட்சி இருந்­தி­ருந்தால் இந்த சலுகை கிடைத்­தி­ருக்­காது. இந்த நிவா­ரணம் மூலம் 6600 வித­மான பொருட்­களை நாம் ஐரோப்­பா­விற்கு ஏற்­று­மதி செய்­ய­வுள்ளோம். 

அத்­துடன் கடந்த மாதம் என்­னு­டைய வெளி­நாட்டு விஜ­யங்­களில் ஊடாக நாட்­டிற்கு பல இலா­பங்கள் கிடைக்­க­பெற்­றுள்­ளன. இந்­தியா, ஜப்பான் ஆகிய நாடு­க­ளுடன் பல ஒப்­பந்­த­ங்களை கைச்­சாத்­திட்­டுள்ளோம். 

இதன்­மூலம் கொழும்பு நகரம், கண்டி நகரம், கொழும்பு துறை­முகம் வடக்கே புதிய துறை­முகம் நிர்­மா­ணித்தல், திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்தல் போன்ற பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

மேலும் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பிர­தான தடை­யாக இருப்­பது நாட்டின் கட­னாகும். 2018 ஆம் ஆண்டு மாத்­திரம் 96 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

2020 ஆகும் போது 1500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இந்த நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும். எனினும் நாம் கடன் சுமையை குறைத்து கொண்டு தொழிற்சாலைகளை ஆரம்பித்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என்றார்.

 

Comments