ஆரையம்பதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்தில் சலீம் முகம்மட்இ சப்னி வபாத்
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்த நேற்று இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதில் பலத்த காயங்களுக்குள்ளான இந்த நான்கு இளைஞர்களும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சலீம் முகம்மட், சப்னி (வயது 17) என்பவர் இன்று (1) காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த இளைஞர் புதிய காத்தான்குடி விஸ்டம் வீதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


Comments
Post a Comment