கிழக்கில் தமிழ் - முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த சதி

- கந்­தளாய் மேல­திக நிருபர் -

விச­மிகள் முயற்சி என இம்ரான் எம்.பி குற்­றச்­சாட்டு இரு­த­ரப்­பி­னரும் அவ­தா­ன­மாக செயற்­பட கோரிக்கை
கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் - முஸ்லிம் கல­வ­ர­மொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கடந்த சில தினங்­க­ளாக சில தீய சக்­திகள் முயற்­சித்து வரு­வ­தாக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சுமத்­தினார்.

இது குறித்து இரு தரப்­பி­னரும் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும் எனவும் அவர் வேண்­டுகோள் விடுத்தார்.

மூதூர் மல்­லிகை தீவில் மூன்று தமிழ் மாண­வி­களை முஸ்லிம் இளை­ஞர்கள் பாலியல் துஸ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறி அப்­ப­கு­தியில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலையின் உண்மை தன்­மை­யினை அறிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நேற்­று­முன்­தினம் அப்­ப­கு­திக்கு விஜயம் செய்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
பிரத்­தி­யேக வகுப்­புக்கு சென்ற மூன்று தமிழ் மாண­வி­களை அப்­ப­கு­தியில் கட்­டிட நிர்­மா­ணப்­ப­ணி­களில் ஈடு­பட்­டி­ருந்த இரண்டு முஸ்லிம் இளை­ஞர்கள் பாலியல் துஸ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய பின் தலை­ம­றை­வா­கி­ய­தாக கூறி அக்­கட்­டிட ஒப்­பந்­த­கா­ர­ரையும் அவரின் உத­வி­யா­ள­ரையும் சிலர் கட்­டி­வைத்து அடித்து துன்­பு­றுத்­தி­யுள்­ளனர்.

நேற்று காலை தலை­ம­றை­வா­ன­தாக கூறிய இரண்டு இளை­ஞர்­களும் பொலிசார் முன்­னி­லையில் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். ஆனால் துஸ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மாண­விகள் தம்மை துஸ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­வர்கள் இவர்கள் இல்லை என வாக்­கு­மூலம் அளித்­துள்­ளனர்.

ஆகவே இச்­சம்­ப­வத்தின் குற்­ற­வா­ளிகள் யார்? அவர்கள் எந்த சமூ­கத்தை சேர்ந்­த­வர்கள் என்­பது இன்னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது இவ்­வா­றி­ருக்க ஊட­கங்­க­ளிலும் சமூக வலை­த­ளங்­க­ளிலும் இச்­சம்­ப­வத்தை முஸ்லிம் சமூ­கத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி இச்­செய்­தியை திரி­பு­ப­டுத்தி வதந்­திகள் பரப்­ப­ப­டு­வதன் மூலம் இப்­ப­கு­தி­களில் பல வரு­ட­கா­ல­மாக ஒற்­று­மை­யாக வாழ்ந்­து­வரும் தமிழ் முஸ்லிம் சமூ­கத்தின் இன நல்­லு­றவை சீர்­கு­லைக்க சில குழுக்கள் செயற்­பாட்டு வரு­கின்­றமை தெளி­வா­கின்­றது.

இது­போன்று கடந்த சில தினங்­க­ளாக இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லு­றவை சீர்­கு­லைக்கும் வகையில் பல செயற்­பா­டுகள் இப்­பி­ர­தே­சத்தில் அரங்­கேற்­றப்­ப­டு­வதை அவ­தா­னிக்­க­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. உதா­ரா­ண­மாக அண்­மையில் தமிழ் மக்­களின் பூர்­வீக  காணி­களை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மித்து வரு­வ­தாக கூறி இப்­ப­குதி தமிழ் மக்­களை தூண்­டி­விட்டு போராட்­டங்­களில் ஈடு­பட்­டதை கூறலாம்.

அவ்­வாறு அவர்­களின் பூர்­வீக காணிகள் ஏதா­வது ஆக்­கி­ர­மிக்கப் பட்­டி­ருப்பின் அதற்­கு­ரிய ஆதா­ரங்­க­ளுடன் அவர்கள் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கலாம். ஆனால் இது­வ­ரையில் அவ்­வா­றான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக நான் அறி­ய­வில்லை.

ஆகவே தற்­போது அப்­ப­கு­தியில் தமிழ் முஸ்லிம் உறவை சீர்­கு­லைக்க சில  குழுக்கள் சில அமைப்­பு­களின் தனிப்­பட்ட நிகழ்ச்­சி­நி­ர­லுக்கு அமை­வாக செயற்­ப­டு­கின்­றமை தெளி­வா­கின்­றது. ஆகவே இவர்­களின் சூழ்ச்­சி­களை முறை­ய­டித்து இப்­ப­கு­தி­களில் வாழும் இரண்டு சமூ­கங்­களும் தமைக்­கி­டையில் பல்­லாண்டு கால­மாக நிலவும் நல்­லு­றவை பேணி நடக்­கு­மாறு அன்­புடன் கேட்­டுக்­கொள்­கிறேன்.
அத்துடன் சிறுவர்கள் பாலியல் வற்புறுத்தளுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்படும் வரை இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் கோரிக்கை விடுக்கிறேன். 

மேலும்  உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுகொடுக்கும் வரை தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம் என்றார்.

Comments