மகிந்தவை சந்தித்த அமைச்சர்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தங்கை காந்தினி சித்ராணி ராஜபக்ஸவின் உடலுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நுகேகொட – எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள சித்ராணி ராஜபக்ஸவின் வீட்டிற்கு சென்றே மங்கள சமரவீர நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன் போது, மஹிந்தவை சந்தித்த மங்கள அவருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஸவின் தங்கைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரும் சென்றுள்ளனர்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையிலேயே காந்தினி சித்ராணி ராஜபக்ஸ ரணவக்க நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment