ஓட்டமாவடியிலிருந்து நாவலடி உள் வீதிகளுக்கான பஸ் சேவை ஆரம்பம்

-எம்.ரீ. ஹைதர் அலி

ஓட்டமாவடியிலிருந்து நாவலடி உள் வீதி வழியாக மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் பஸ் சேவையொன்று மக்களின் நலன்கருதி கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரினால் 2017.05.12ஆந்திகதி-வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ். எச்.எம். இஸ்மாயில், இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலை முகாமையாளர் எம்.ஐ.எம். அஸீஸ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம். அஹமட்லெப்பை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை செயலாளர் எஸ். இந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சேவையானது ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி வங்கி பிரதான வீதி ஊடாக சென்று இன்ஸானிய்யா பிரதான வீதி வழியாக நாவலடி - கொழும்பு பிரதான வீதியினை வந்தடையும் இச்சேவையானது 2017.05.15ஆந்திகதி-திங்கட்கிழமை நாளை முதல் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக இதுவரை காலமும் அக்கிராமத்திலுள்ள மக்களின் நீண்டநாள் தேவைப்பாடாக இருந்துவந்த  உள் கிராமங்களுக்கான பஸ் சேவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.



Comments