சவாலில் வென்று விட்டோம்: மஹிந்த
காலிமுகத்திடல் நிரம்பி வழியுமளவு ஆதரவாளர்களை ஒன்று சேர்த்துக் காட்டுவோம் என தாம் விடுத்திருந்த சவாலை சாதித்துத் காட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
ஆதலால், இனியும் தாமதியாது அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை நடாத்திக் காட்ட வேண்டும் என தற்போது தாம் சவால் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இனியும் அரசாங்கம் தாமதித்தால் பொது மக்கள் வீதியிலிறங்கிப் போராடுவதைத் தவிர்க்க முடியாது எனவும் அரசாங்கம் இதற்கு மேலும் கூட்டு எதிர்க்கட்சியின் பலத்தைப் பரிசோதித்துக் கொண்டிராமல் உடனடியாக தேர்தலை நடாத்த வெண்டும் என்றும் நேற்றைய கூட்டத்தில் வைத்து அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment