ரிசாதை தொடாத ‘சட்டம்’ என்னைத் தொட முடியாது: ஞானசார


ரிசாத் பதியுதீன், வட மாகாண முதலமைச்சர் விக்ணேஸ்வரன், அசாத் சாலி போன்றோரைத் தொடாத சட்டம் தன்னைத் தொட முடியாது என சூளுரைத்துள்ளார் பயங்கரவாதி ஞானசார.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கிணங்கவே தன்னை நேற்றிரவு கைது செய்ய முயன்றதாகவும் அதேவேளை வடக்கில் விக்ணேஸ்வரன் நாட்டைப் பிரிக்கும் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுகின்ற போதிலும், ரிசாத் பதியுதீன் காடழிக்கின்ற போதிலும், அசாத் சாலி ஜிஹாத் அழைப்பு விடுக்கின்ற போதிலும் பாயாத சட்டம் தன்னை மட்டும் தொட முடியாது எனவும் தற்போது தலதா மாளிகை சென்றிருக்கும் நிலையில் அங்கு வைத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அநுராதபுர செல்லவிருந்த ஞானசார தற்போது கண்டியில் தரித்து நிற்கின்றமை குறிப்பிடததக்கது.

Comments