பிரி­வினைவாதத்தை தோற்றுவித்தோர் இன மத வாதத்தை தூண்­டு­கின்­றனர்

எம்.ஆர்.எம்.வஸீம் -

சட்­டத்தை மீறு­வோ­ருக்கு நட­வ­டிக்கை என்­கிறார் பிர­தமர்
பிரி­வினை வாதத்தை தோற்றுவித்­த­வர்கள் தற்­போது இன­வாத்­தையும் மத­வாதத்­தையும் கையில் எடுத்­துள்­ளனர். எக்­கா­ரணம் கொண்டும் இன­வா­தத்­துக்கு இட­ம­ளிக்­க­மு­டி­யாது. அத்­துடன் சட்­டத்தை மீறு­ப­வர்கள் எந்த இனத்தை சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் பொலிஸார் அவர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

மேலும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்­ப­டு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது எனவும் தெரி­வித்தார்.

தேசிய இளைஞர் சேவை மன்­றத்தின் வெற்­றி­க­ர­மான செயற்­திட்­டத்தை முடித்த இளை­ஞர்களை கெள­ர­விக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளி­கையில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், 

இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்தி அவர்­களை முன்­னுக்கு கொண்­டு­செல்லும் வேலைத்­திட்டம் ஒன்றை ஜனா­­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரத்­துக்கு வந்­த­துடன் ஆரம்­பிக்க நட­வ­டிக்­ககை எடுத்தோம்.

அத­ன­டிப்­ப­டை­யிலே மீண்டும் இளைஞர் அமைப்பை ஆரம்­பித்தோம். அர­சியல் இல்­லாத இளைஞர் அமைப்­பு­களை கிரா­மங்­களில் ஏற்­ப­டுத்­தினோம். ஏனெனில் அரசியல் செய்­வ­தற்கு அர­சியல் கட்­சிகள் இருக்­கின்­றன. அத்­துடன் இளைஞர் அமைப்­பு­களை மேலும் முன்­னேற்­று­வ­தற்கு இளைஞர் பாரா­ளு­மன்­றத்தை ஏற்­ப­டுத்­தினோம்.

அத்­துடன் இளைஞர் அமைப்பு உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கு­மாறு இளைஞர் அமைப்பின் தலை­வ­ருக்கு தெரி­வித்­துள்ளேன், அத்­துடன் கிரா­மங்­க­ளுக்கு சேவை செய்யும் பொருட்டு கூடு­த­லாக நிதி ஒதுக்­கி­யுள்ளோம். அதே­போன்று இளை­ஞர்களின் தொழில் மற்றும் வரு­மா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.இந்த வேலைத்­திட்­டங்­களை நல்­ல­மு­றையில் முன்­னேற்­றப்­பா­தைக்கு கொண்டு செல்­வ­தற்கு ஆரம்­ப­மாக நாட்டில் நல்­லி­ணக்கம் மற்றும் சமா­தானம் இருக்­க­வேண்டும்.

மேலும் இந்த நிகழ்வில் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வந்த இளை­ஞர்கள் போட்­டி­களில் முத­லி­டங்கள் பல­வற்றை பெற்­ற­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். பெரு­மைப்­ப­டு­கின்றேன். இற்­றைக்கு 15வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்த நிகழ்வு நடை­பெற்­றி­ருந்தால் யாழ்ப்­பா­ணத்­துக்கு இந்த சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­காது.

1985 ஆம் ஆண்­டுக்கு பிறகு வடக்கில் இருந்த வேலைத்­திட்­டங்கள் அனைத்தும் செய­லி­ழக்­கப்­பட்­டன. யுத்தம் கார­ண­மாக வடக்கின் இளை­ஞர்கள் நாட்டை விட்டு சென்­றனர். ஆனால் இன்று அங்கு யுத்தம் இல்லை. இளை­ஞர்­க­ளுக்கு நம்­பிகை ஊட்­டும்­வ­கையில் தெற்­கைப்­போன்று அங்கும் அபி­வி­ருத்தி ஏற்­ப­ட­வேண்டும். ஒற்­று­மையும் இருக்­க­வேண்டும்.

மேலும் அர­சியல் கட்­சிகள் என்­ற­வ­கையில் நாங்கள் ஒன்­றி­ணைந்து புதிய அர­சியல் அமைப்பை ஏற்­ப­டுத்தி நாட்டை முன்­னேற்­றத்­தின்பால் கொண்­டு­செல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்­பட இட­ம­ளிக்க முடி­யாது. நாட்டில் நல்­லி­ணக்கம் இல்­லா­விட்டால் அபி­வி­ருத்­தியும் இல்­லா­ம­லா­கி­விடும். 83ஆம் ஆண்டு எமக்கு பின்னால் இருந்த இந்­தோ­னே­சியா,தாய்­லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இன்று எம்மை முந்­திச்­சென்­றுள்­ளன. பங்­க­ளாதேஷ் எமக்கு அருகில் இருக்­கின்­றது. நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் ஏற்­ப­டாமல் இருந்தால் நாங்கள் இந்த நாடு­க­ளுக்­கெல்லாம் முன்­னி­லையில் இருந்­தி­ருப்போம்.

அத்­துடன் இந்த நிகழ்­வுக்கு யாழ்ப்­பா­ணத்தில் இரந்து இளை­ஞர்கள் வந்­தி­ருப்­பது சுப­வா­த­மாகும். இதன் மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய நல்­லி­ணக்­கத்தை பாது­காத்­துக்­கொண்டு  அடுத்­து­வ­ரக்­கூ­டிய 10 – 15 வரு­டங்­களில் நாட்டை துரி­த­மாக அபி­வி­ருத்தி செய்ய வேண்டும். அதற்கு ஏதேனும் தடைகள் வரு­மாக     இருந்தால் அதனை நாங்கள் நிறுத்­த­வேண்டும். குறிப்­பாக நாட்டை முன்­னேற்­று­வ­தற்கு நாங்கள் கவனம் செலுத்­து­வ­தாக இருந்தால் நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை மேற்­கொண்டு விரை­வாக முன்னேற்ற வேண்டும்.

அதற்­காக சர்­வ­தேச நாடு­களில் இருந்து எங்­க­ளுக்கு பாரி­ய­ளவில் ஒத்­து­ழைப்பு கிடைத்து வரு­கின்­றது. இந்த மாதம் முதல் ஜீ.எஸ். பி. மீண்டும் கிடைத்­துள்­ளது.இந்­தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு உதவ முன்­வந்­துள்­ளன. இதற்கு அடிப்­ப­டைக்­கா­ரணம் அர­சியல் , நல்­லி­ணக்கம் மற்றும் ஜன­நா­ய­க­மாகும். இந்த நல்­லி­ணக்கம் மற்றும் ஜன­நா­ய­கத்தை யாரா­வது சிதைக்க முற்­பட்டால் அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. இல்­லா­ம­லாக்­கப்­பட்ட பிரி­வினை வாதத்தை மீண்டும் ஏற்­ப­டுத்த  சிலர் முயற்­சிக்­கின்­றனர்.

அத்­துடன் யாராலும் இன­வாதம் மத­வா­தத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்­கவும் முடி­யாது.அந்த செய்­பா­டு­களை நாங்கள் அனை­வரும் கண்­டிக்­க­வேண்டும். நாட்டை பிள­வு­ப­டுத்த இட­ம­ளிக்க முடி­யாது.

மதம் என்­பது அனை­வ­ரையும் ஒன்­றி­ணைப்­ப­தாகும். பிரிப்­ப­தல்ல. யாரா­வது இன,மத­வா­தத்தை ஏற்­ப­டுத்த முயற்­சித்தால் அதனை தடுப்­பது அனை­வ­ரதும் கட­மை­யாகும்.மதத்­தைக்­கொண்டு வைராக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த எந்த மதத்­திலும் தெரி­விக்­க­வில்லை. நாங்கள் எவ்­வாறு கதைக்­க­வேண்டும் என்று புத்­த­பெ­ருமான் எங்­க­ளுக்கு போதித்­துள்ளார்.எங்­க­ளது உள்­ளத்தை திருத்­திக்­கொண்­டால்தான் நாங்கள் பெளத்­தர்­க­ளா­கலாம்.அவ்­வாறு கதைக்­க­வில்லை என்றால், உள்­ளத்தை கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்­ளா­விட்டால் அதன் பெறு­மதி என்ன என்று கேட்­கின்றேன்.

அதனால் இன,மத­வா­தங்­களை ஏற்­ப­டுத்­து­வதை நாங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். இதற்கு எதி­ராக செயற்­ப­டு­மாறு மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும்.

அதற்­காக அனைத்து இளை­ஞர்­களும் தங்கள் கிரா­மங்­களில் இன,மதவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று யாராவது சட்டத்தை மீறுவதாக இருந்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்த இனத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளோம்.

அதேபோன்று இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் பொலிஸார் உடனடியாக இதற்கு எதிராக செயற்படவேண்டும். நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டவும் பொலிஸார் சட்டத்தை பாதுகாக்கவும் நாங்கள் இடமளிக்கவேண்டும் என்றார்.

Comments