ஞான­சார தேரரை கைது செய்க


பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு
அல்­லாஹ்வை கேவ­ல­மாக விமர்­சித்­து­வரும் ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது­செய்ய வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான றிஷாட் பதி­யுதீன், லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தித்­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான பைசர் முஸ்­தபா, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மரிக்கார், தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கூட்­டாக இணைந்து பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று முறைப்­பாடு ஒன்றை  பதிவு செய்­துள்­ளனர். 

ஞான­சார தேரர் முஸ்­லிம்கள் மீதும் அல்­லாஹ்வின் மீதும் தொடர்ச்­சி­யாக கக்­கி­வரும் விஷக்­க­ருத்­துக்கள் அடங்­கிய ஆவ­ணங்­க­ளையும் அவர்கள் பொலிஸ் தலை­மை­ய­கத்தில்  சமர்ப்­பித்து உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தினர்.

பொலிஸ் முறைப்­பாட்டை பதிவு செய்த பின்னர், பொலிஸ்மா அதி­பரை நேரில் சந்­தித்து ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கைகள் கட்­டுக்­க­டங்­காமல் இருப்­ப­தாக விவ­ரித்­தனர். கடந்த ஆட்­சி­யிலும் அல்­லாஹ்­வையும் ரசூ­லையும் மோச­மாக தூஷித்த இந்த இன­வாத தேரர் இந்த ஆட்­சி­யிலும் எந்­தக்­கு­றை­வு­மில்­லாது, சட்­டத்­துக்கு எந்தப் பய­மு­மில்­லாது, அதே போன்ற அரா­ஜக நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்றார்.

பொலி­சாரும் அவ­ருக்­கெ­த­ரிக நட­வ­டிக்கை எடுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. நல்­லாட்சி அரசும் அவரைக் கட்­டுப்­ப­டுத்­தாமல் பரா­மு­க­மாக இருக்­கின்­றது. அந்த ஆட்­சிக்கும் இந்த ஆட்­சிக்கும் முஸ்­லிம்­களை பொறுத்தவரையில் எந்த வித்­தி­யா­சமும் இருப்­ப­தாக நாங்கள் காண­வில்லை.  முஸ்­லிம்கள் ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கையில் கொதிப்படைந்து இருப்பதுடன் நல்லாட்சியிலும் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்றும் இதன்போது முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் சுட்டிக்காட்டினர்.

Comments