முஸ்லிம் கடைகள் தாக்கப்படுவது தொடர்பான ஊடக கருத்தரங்கு

(அல் அஸ்லம்)

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் இனங்காணப்பட்டு, தாக்கப்பட்டு வரும் நாசகார செயற்பாடுகள் குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர் கருத்தரங்கு ஒன்று இன்று மாலை 3.00 மணிக்கு கொழும்பு 7 இல் உள்ள தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவனினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுமலர்ச்சி இயக்கத்தினால் மேற்படி கருத்தரங்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய அழைப்பிதழில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளிலே முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் இனங்காணப்பட்டு அவற்றை தீ மூட்டி அழிக்கும் நாசகார வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பிற்போக்கு சிந்தனையுள்ள சிறு குழுவொன்றினாலேயே இந்த நாசகார வேலை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

இந்த நாசகார செயற்பாடு தொடர இடமளிக்கப்படுமானால் அதனால் நாடு அடையப் போகும் விளைவுகளோ பாரதூரமாக அமையும்.

இது குறித்து தெளிவூட்டுவதற்காகவே மறுமலர்ச்சி இயக்கம் மேற்படி கலந்துரையாடலை நடத்த முன்வந்திருக்கிறது என்று குறித்த அழைப்பிதழில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

Comments