நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

கவர்ஸ் கூட்டுத்தாபனம் எனும் நிறுவனம் ஊடாக 30 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஐவருக்கு உயர் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு ஹலோ கோர்ப் நிறுவனம் ஊடாக நாமல் ராஜபக்ச நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நாமலின் சகாக்களான சேனானி சமரநாயக்க, இந்திக கருணாஜீவ, இரேஷா சில்வா, சுஜனி போகல்லாகம ஆகியோருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments