திருகோணமலை, நிலாவெளி பகுதியில், சைக்கிள் ஒன்றுடன் லொறி மோதியதில், வயோதிபர் பலி
திருகோணமலை, நிலாவெளி பகுதியில், சைக்கிள் ஒன்றுடன் லொறி மோதியதில், சைக்கிளில் பயணித்த வயோதிபர் ஒருவர் இன்று (5) உயிரிழந்துள்ளதாக, நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் நிலாவெளி, 2ம் வட்டாரம், பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த, 74 வயதுடைய கே.தம்பி ஐயா என, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதியை நிலாவெளி பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment