தோப்பூர் நீணாக்­கே­ணியில் பிக்­குகள் தலை­மை­யி­லான குழு முஸ்லிம்களின் காணியில் அத்­து­மீறல்

-Ihzana Fareed

திரு­கோ­ண­மலை சேரு­நு­வர பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட தோப்பூர்  நீணாக்­கேணி பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள்  பூர்­வீ­க­மாக பயிர்ச்­செய்கை மேற்­கொண்டு வசித்து வந்த குடி­யி­ருப்புக் காணியை அத்­து­மீறி பௌத்த மத­கு­ருவும், பௌத்த இளைஞர் குழுவும் இயந்­தி­ரங்களின் உத­வி­யோடு அப­க­ரிக்க முனைந்­த­மையால் பதற்ற நிலை தோன்­றி­யது.இச்­சம்­பவம் திங்­கட்­கி­ழமை காலை இடம் பெற்­றுள்­ளது. 

காணியின் பாது­காப்­பிற்­காக போடப்­பட்­டி­ருந்த வேலிகள் இயந்­தி­ரங்­களால் உடைத்­தெ­றி­யப்­பட்­டுள்­ளன.

அதைத் தொடர்ந்து ஒன்று திரண்ட ஊர்­மக்கள் மற்றும் பிக்­கு­க­ளுக்­கி­டையே முறுகல் நிலை உக்­கி­ர­ம­டைந்­தது.

இத­னை­ய­டுத்து சேரு­நு­வர பொலிஸார்  நீதி மன்­றத்­தினை நாடி தீர்வைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு இரு தரப்­பி­ன­ரையும் சம­ரசம் செய்­தனர்.

தோப்பூர் பிர­தே­சத்தைச் சேர்ந்த குறித்த காணியின் உரி­மை­யா­ளர்கள்  1959 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உரிமை ஆவணத்தை கொண்டிருக்கின்றார்கள்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments