இலங்கை - மலேசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்



இலங்கையின் அரச சேவை முகாமைத்துவ நடவடிக்கைகளை தொழில்நுட்ப மயப்படுத்துவதற்கு மலேசிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை - மலேசிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தயாரிப்பதற்கான பின்னணி தொடர்பில் மலேசிய பிரதமருக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

ஒரே கரையோரம் - ஒரே பாதை என்னும் தொனிப்பொருளின் கீழ் சீன தலைநகர் பீஜீங்கில் நடைபெற்று வரும் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Comments