காலம் தாழ்த்­து­வது ஆரோக்­கி­ய­மல்ல


மாவில்லு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தை இரத்துச் செய்ய வேண்­டு­மென  44 நாட்­க­ளாக மறிச்­சிக்­கட்­டியில் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை மேற்­கொண்ட பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது போராட்­டத்தை கடந்த வாரம் தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­தி­யி­ருந்­தனர்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நடாத்­திய பேச்­சு­வார்த்­தையில் ஏற்­பட்ட புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் மாவில்லு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் ஏற்­பட்­டுள்ள தவ­று­களை திருத்தும் வழி­வ­கைகள் ஏற்­பட்­டுள்­ளதால் போராட்­டத்தை தற்­கா­லி­க­மாக நிறுத்­து­மாறு அமைச்­சர்­க­ளான றிஷாட் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிர­தி­நி­திகள் ஆகியோர் விடுத்த வேண்­டு­கோளை ஏற்­றுக்­கொண்டே இந்தப் போராட்டம் தற்­கா­லி­க­மாக கைவி­டப்­பட்­டது.

ஜனா­தி­ப­தியின் பணிப்­பு­ரையின் பேரில் இம் மாதம் 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன் நடாத்­தப்­ப­ட­வி­ருந்த பேச்­சு­வார்த்­தையில் தீர்க்­க­மான முடி­வொன்று கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கை­யி­லேயே மேற்­படி வாக்­கு­று­தியை அர­சியல் தலை­வர்­களும் சிவில் பிர­மு­கர்­களும் மறிச்­சுக்­கட்­டியில் போராட்­டத்தில் ஈடு­பட்டு வந்த மக்­க­ளிடம் முன்­வைத்­தி­ருந்­தனர்.

எனினும் குறிப்­பிட்ட திக­தியில் இச் சந்­திப்பு நடை­பெ­ற­வில்லை. இன்னும் ஓரிரு தினங்­க­ளுக்குள் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த வகையில் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் தலை­மையில் நடக்கும் என எதிர்­பார்க்­கப்­படும் இந்த பேச்­சு­வார்த்­தையில் முஸ்­லிம்­க­ளுக்குச் சாத­க­மான முடி­வுகள் எட்­டப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வது மேற்­படி அர­சியல் மற்றும் சிவில் தலை­மை­களின் கடப்­பாடு என்­பதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம்.

ஜனா­தி­ப­தியின்  மேற்­படி வர்த்­த­மானி பிர­க­ட­ன­மா­னது மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மாகும். இது அப்­ப­கு­தியில் காலா­கா­ல­மாக வாழ்ந்து வந்த  மக்­களின் குடி­யு­ரி­மையைப் பறிக்­கின்ற செய­லாகும்.  முஸ்­லிம்­களின் வாக்­கு­களால் ஆட்­சிக்கு வந்த ஒரு ஜனா­தி­பதி  இவ்­வாறு முஸ்­லிம்­களின் பூர்­வீக  உரி­மையைப் பறிக்­கின்ற செயலில் மிகத் தெளி­வாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றமை எந்­த­வ­கை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும்.

இறு­தி­யாக நடந்த அர­சியல் மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி, வனப் பரி­பா­லனத் திணைக்­க­ளத்­திற்கு உரிய காணிகள் வன ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளத்தின் கீழ் கொண்டு வரப்­பட வேண்­டு­மென தான் விடுத்த பணிப்­புரை தவ­றாகப் புரிந்து கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும்,  மக்கள் வாழும் பகு­தி­களை அவ்­வாறு வர்த்­த­னிமாயில் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு தான் உத்­த­ர­வி­ட­வில்லை என்றும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அவ்­வா­றெனில் அதனை இரத்துச் செய்து மக்­களின் வாழி­டங்­களை உள்­ள­டக்­காத வகையில் வர்த்­த­மா­னியை திருத்தி வெளி­யி­டு­வ­தற்கு ஜனா­தி­ப­தியும் அவ­ரது செய­லா­ளரும் இவ்­வ­ளவு காலம் இழுத்­த­டிப்­பது ஏன் என்ற கேள்வி எழு­கி­றது.

கடந்த 40 நாட்­க­ளுக்கும் மேலாக அம் மக்கள் போராட்டம் நடத்­தியும் அதனை அர­சாங்க உயர் மட்டம் கருத்திற் கொள்­ள­வில்லை. எனினும் ஜனா­தி­பதி வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ள­தாக முஸ்லிம் அமைச்­சர்­களும் சிவில் தலை­மை­களும் கூறிய வார்த்­தை­களை நம்­பியே தற்­போது போராட்டம் கைவி­டப்­பட்­டுள்­ளது.

இதன் பிறகும் அம் மக்­களை ஏமாற்றும் வகையில் ஜனா­தி­ப­தியோ அர­சாங்க அதி­கா­ரி­களோ செயற்­படக் கூடாது. அதேபோன்று தமது அரசியல் நலன்களுக்காகவும் வாக்கு வங்கிகளுக்காகவும் இந்த விவகாரத்தை கிடப்பில் போடவோ போராட்டங்களை திசை திருப்பவோ எவரும் முனையக் கூடாது என்பதையும் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரதும் பொறுப்பு என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

Comments