கல்முனை ஸாஹிரா மாணவன் சாதனை
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் ஏ.எம். முஹம்மட் செளபாத் இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி இணைந்து நடாத்திய “Innova Minds-2017” என்ற புத்தாக்க போட்டியில் இறுதி சுற்றில் வெற்றி பெற்று சாதனை.
இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கு இடையில் அதிவிஷேட புத்தாக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு புத்தாக்குனர்களின் நலன் கருதியும் தேசிய ரூபவாஹினியோடு இணைந்து நடாத்தப்படுகின்ற இந் நிகழ்ச்சியானது விளம்பரம் மாத்திரமன்றி புத்தாக்குனர்களுக்கு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டுகளில் தமது கண்டுபிடிப்புகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு துணைபுரிகிறது.
இம் மாணவன் கலந்து கொண்ட இறுதிச்சுற்றானது கடந்த வெள்ளிக்கிழமை (2017:04:28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கெளரவ சுசில் பிரேமஞெயந்த கலந்து கொண்டு இம்மாணவனுக்கும்,இறுதி சுற்றில் கலந்து கொண்ட பாடசாலைக்குமான பரிசில்களை ஏ.ஆதம்வாபா ஆசிரியருக்கும் வழங்கி வைத்தார்
இம்மாணவனுக்கு கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சமூகம் தங்களது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.
(தகவல் :- பாடசாலை ஊடக பிரிவு, புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசிய கல்லூரி கல்முனை)


Comments
Post a Comment