முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலை, சகல நடவடிக்கைகளும் நிறுத்தம்
மாணிக்கமடு – மாயக்கல்லி மலைப்பிரதேசத்தில் தற்போதைக்கு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என மாணிக்கமடு பரிவார சைத்திய மகா விகாரையின் அதிபதி அம்பேபிட்டிய சீலரத்ன தேரர் குறிப்பிட்டார்.
மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்காக நேற்று மே மாதம் 1 ஆம் திகதி நடாத்தப்பட
இருந்த பூஜை வழிபாடுகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
முதலாம் திகதி (நேற்று) நடத்த திட்டமிட்டிருந்த பூஜை வழிபாடுகளும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இதே வேளை மாயக்கல்லி மலைப்பிரதேசத்தில் எந்த விதமான புதிய கட்டட நிர்மாணங்களையும் அமைக்காதவாறு தான் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தன்னிடமும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடமும் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Comments
Post a Comment