முஸ்­லிம்­களின் தலையில் வைக்கும் தீ தேசத்தின் தேகத்தில் இடும் தீயாகும்.


முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் 
நெருப்பு ஆயு­தத்தை உப­யோ­கித்து பௌத்த சிங்­கள வெஞ்­சினக் குழுக்கள் முஸ்லிம் மக்­களின் மார்க்கம், மஸ்ஜித் மற்றும் பொரு­ளா­தாரம் ஆகி­ய­வற்றின் மீது 2013 இல் தொடங்­கிய ஒரு­த­லைப்­பட்ச யுத்தம் இன்று வரை ஏறு­மு­கத்தில் தொடர்­கி­றது.


முஸ்லிம்கள் மீது தாக்­குதல் தொடுத்து உயிரை உறிஞ்சி, வர­லாறு காணாத வகையில் சிங்­கள- முஸ்லிம் கல­வரம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் வட­கி­ழக்­கிற்கு வெளியில் வாழ்ந்து வரும் மூன்றிலிரண்டு வீத முஸ்­லிம்­களை ஏற்­க­னவே நிலப்­பற்றாக்குறை­யினால் அல்­ல­லுறும் கிழக்கின் முஸ்­லிம்கள் வாழும் நிலப்­ப­கு­திக்குத் துரத்­தி­ய­டிக்கும் வாய்ப்பு ஒன்­றையும், தக்க தரு­ணத்­தையும் முஸ்­லிம்­களே ஏற்­ப­டுத்திக் கொடுப்­பார்கள் என்ற நம்­பிக்­கை­யோடு தர­கர்கள் காத்­தி­ருக்­கி­றார்கள் என்று கணிக்க முடி­கி­றது. 

ஏற்­க­னவே செய்­யப்­பட்ட ஆய்­வு­களின் முடி­வு­க­ளிலும், வர­லாற்று அனு­ப­வத்­திலும் இலங்கை முஸ்­லிம்கள் உணர்ச்சி வேகம் கூடி­ய­வர்கள் என்­ப­தையும், அச்ச உள­வியல் அமையப் பெற்­ற­வர்கள் என்­ப­தையும் இத்­திட்­டத்தின் ஊக்­கிகள் கண்­ட­றிந்­துள்­ளனர்.

என­வேதான், கல­வ­ரத்­துக்­கான கார­ணர்­க­ளாக முஸ்லிம் இளை­ஞர்­களை நிரூ­பிக்க முடியும் என்று நம்­பு­கி­றார்கள். முஸ்லிம் சமூ­கத்­துக்கு மார்க்க விட­யங்­களில் உணர்ச்சி வேகமும், வியா­பார விட­யங்­களில் அச்ச உள­வி­யலும் தவிர்க்க முடி­யாத அம்­சங்­க­ளே­யாகும்.

இவ்­வா­றான கல­வரம் ஒன்றை ஏற்­ப­டுத்த முடி­யு­மானால் அது முஸ்­லிம்­களை மட்­டு­மல்ல முழு இலங்­கை­யையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

இந்த குத்­த­கைக்கு அமர்த்­தப்­பட்­டுள்ள "ஒப்­பந்­த­வாதக்" குழுக்கள் தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள இலக்கை அடை­யாமல் ஓய­மாட்­டார்கள் போல் தோன்­று­கி­றது. 9/11இற்குப் பிந்­திய பாது­காப்பும், பொரு­ளா­தா­ரமும் ஒருங்­க­மைந்த உலக ஒழுங்கின் அடிப்­ப­டையில் இலங்­கையின் கேந்­திர முக்­கி­யத்­துவ அமைவு  புதிய வடி­வெ­டுத்­துள்­ளது.

இதனைக் கணக்கில் எடுத்­துள்ள வெளிச் சக்­திகள் பிராந்­தி­யத்தில் தமது நலன்­களைப் பாது­காக்க நட­வ­டிக்­கைகள் எடுப்­பதைத் தடுக்கும் வல்­லமை நமது அர­சுக்குக் கிடை­யாது.

நிகழ்வு காலத்தில் இலங்­கையை ஆள்­கின்ற இரண்டு கட்­சி­களில் ஒன்று தனது நாட்டை ஆழும் விருப்­பத்தை நிறை­வேற்றிக்கொள்ள தனது சொந்த மக்­களில் தங்­கி­யி­ருப்­ப­திலும் பார்க்க, சர்­வ­தேச சக்­திகள் அவற்றின் இந்து மாக்­கடல் பிராந்­திய நலன் சார்ந்து வகுக்கும் உபா­யங்­க­ளு­டனும், நிகழ்ச்சி நிர­லு­டனும் ஒத்துப் போவதை வழக்­க­மாகக் கொண்ட கட்­சி­யாகும்.

மற்­றை­யது இலங்­கையின் பெருந்­தே­சிய உணர்­வு­க­ளுக்குக் கட்­டுப்­பட்டு, பௌத்த சிங்­க­ள­வர்­களின் நலன் பேணு­வதன் மூலம் நாட்டை ஆழும் அள­வுக்கு வாக்­கு­களை வசூ­லித்துக்கொள்ள முடியும் என நம்­பு­கின்ற கட்­சி­யாகும். முஸ்­லிம்­களை வன்­மு­றைக்கு இரை­யாக்கும் நாச­காரத் திட்டம் வெளியாரின் உபா­ய­மாக இருந்தால், இத்­திட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்கு ஆளும் கட்­சி­களில் ஒன்று எவ்­விதக் கரி­ச­னையும் கொள்­ளாது, எஜ­மான விசு­வா­சத்தைக் காட்­டு­வ­தி­லேதான் கண்­ணா­யி­ருக்கும். 

இந்த முஸ்லிம் விரோதத் திட்­டத்­திற்கு பௌத்த சிங்­களப் பெரும்­பான்மை வாசனை பூசப்­பட்­டி­ருப்­பதால் கூட்­ட­ரசின் மற்­றைய பங்­காளிக் கட்­சியும் தன்னைக் காத்துக் கொள்­வ­தற்கே அன்றி முஸ்­லிம்­களைக் காப்­பாற்ற முனை­யாது.

மேற்­சொன்ன இரு கட்­சி­க­ளி­னதும் நிலைப்­பாடு கார­ண­மா­கத்தான் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் முஸ்லிம் அமைச்­சர்­க­ளையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் சந்­திப்­பதைத் தவிர்த்து அமைச்சர் சாகல ரத்­னா­யக்­காவின் கம்­பத்­துக்குள் பந்தை உதைத்து விட்டு வெளி­நா­டு­க­ளுக்குப் பறக்­கி­றார்கள்.

முஸ்­லிம்கள் மீது சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலம் தொட்டு இருந்து வரு­கிற வியா­பார வெறுப்பு மட்டும் போதாது, புதிய உலக அளவில் வியா­பித்து வரு­கிற இஸ்­லா­மிய மத வெறுப்­பையும் சேர்த்து இலங்­கையில் தீக்­கங்­கு­க­ளாக கக்­கி­னால்தான் கல­வ­ரத்­துக்­குக்குத் தூப­மிட முடியும் என்று, திட்­ட­மிட்­ட­வர்கள் திட்­ட­வட்­ட­மாக நம்­பு­கி­றார்கள் என்­பது மட்டும் திரை­யற்றுத் தெரி­கி­றது. 

ஒவ்­வொரு முறையும் பள்­ளிகள் எரிக்­கப்­படும் போதும் இலங்கை முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்­துள்­ளார்கள் என்ற செய்­திகள் உள்­நோக்­கோடு பரப்­பப்­ப­டு­கின்­றன. தற்­போதும் காத்­தான்­கு­டியில் இருந்தும், வாழைச்­சே­னையில் இருந்தும் ஐ.எஸ். இயக்­கத்தில் முஸ்லிம் இளை­ஞர்கள் முப்­பது பேர் இணைந்­துள்­ள­தாக ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

கல­வரத் திட்டம் சாத்­தி­ய­மானால், இலங்­கையின் பொரு­ளா­தாரம் பாதா­ளத்­துக்குப் பாயும், முஸ்­லிம்கள் அக­தி­க­ளா­வது மட்­டு­மல்ல கிழக்கில் சன நெருக்­கடி தோன்றும். இதனால் தமிழ் – முஸ்லிம் முரண்­பாடு ஆழ­மாகி இன்­னொரு இனக் கல­வ­ரமும் காணிச் சண்­டையும் ஏற்­படும் வாய்ப்­புண்டு. அக­தி­களின் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளா­கவும், போச­கர்­க­ளா­கவும், பாது­கா­வ­லர்­க­ளா­கவும் இருக்கும் கிழக்கு முஸ்­லிம்கள் தங்கள் வளங்கள் பங்­கி­டப்­ப­டு­வதைக் காலப் போக்கில் சகிக்­காது போனால் சமூக உள் முரண்­பாடு தோன்றும்.

இந்­நி­லைமை ஒட்டு மொத்த முஸ்­லிம்­க­ளையும் நாடற்­ற­வர்­க­ளாக ஆக்­கு­வ­தோடு, மாபெரும் தீவி­ர­வாத வன்­மு­றைகள் வெடித்து நாடே சுக்­கு­நூ­றாகும் சூழ்­நிலை தோன்றும். மேலும் இன்று மஸ்­ஜித்­க­ளுக்கும், வியா­பாரத் தலங்­க­ளுக்கும் வைக்கும் நெருப்பு எதிர்­கா­லத்தில் இலங்கைத் தீவையே எரித்தப் பொசுக்கும்.

முஸ்­லிம்­களின் தலையில் வைக்கும் தீ தேசத்தின் தேகத்தில் இடும் தீயாகும். மேற்­காணும் ஆபத்தை இல்­லாது செய்ய இது­வரை விலை போகா­தி­ருக்கும் புத்திஜீவிகள் சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்குள் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் வேலைத் திட்­டத்தை அவ­ச­ர­மாகத் தொடங்க வேண்டும். ஏலவே இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக மூன்று தசாப்­த­கால உள்­நாட்டு யுத்­தத்தில் இரண்டு தலைமு­றை­யி­னரின் வாழ்வைத் தொலைத்த அனு­ப­வத்தைக் கொண்ட நாம் இன்னும் முப்­பது வரு­டங்­களைத் தாங்­க­மாட்டோம்.

 அர­சாங்­கத்தை அமைத்­துள்ள பெரிய கட்­சி­களின் தலை­வர்­களும் மக்கள் பிர­தி­நி­தி­களும் நாட்டுப் பற்­றா­ளர்­க­ளாக நடித்துக் கொண்டு, நாடு நாச­மாகிப் போனாலும் பர­வா­யில்லை, தொடர்ந்து நமது கட்சி ஆட்­சியில் அமர்ந்­தி­ருந்தால் சரி என்ற நிலைப்­பாட்டில் இருந்தால் மக்­க­ளில்­லாத நாடே எஞ்சும் என்­பதை உணர்ந்து விழிப்­ப­டைய வேண்டும்.

தற்­காலத் தலை­வர்­களே, நீங்கள் உங்­க­ளுக்கு முன்­பி­ருந்த தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் பின்­பற்­றிய எல்லாம் முடிந்த பின் கண் திறந்து பார்க்கும் 1956, 1977, 1983 ஆம் ஆண்­டு­களின் "நிஷ்ட்டைத் " தந்­தி­ரத்தைப் பின்­தொ­ட­ரக்­கூ­டாது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச,  நிகழும் பெருந்­துயர் பற்றி இது­வரை எது­வுமே கூற­வில்லை. இவர் இன்­னொரு யுத்­தத்­தையும் வெல்ல முடியும் என்று இறு­மாந்து, வாளா­தி­ருக்க முடி­யாது. இன்­று­வரை சிங்­களப் பெரும்­பான்மை மக்­க­ளுக்குள் பெரும்­பான்மை ஆத­ரவைக் கொண்­டி­ருப்­பவர் என்ற வகை­யிலும், தேர்தல் அர­சி­யலில் ஒரு சூடு கண்ட பூனை என்ற வகை­யிலும் மக்­க­ளுக்கு ஆபத்தின் விளைவை விளக்க முன்­வர வேண்டும்.  இவர் தன்னை முன்­னி­றுத்தி அர­சியல் இலாபம் தேடும் ஒன்­றி­ணைந்த எதிர்க் கட்­சியின் மக்கள் பிர­தி­தி­தி­களைக் களத்தில் இறக்கி சிங்­கள மக்­களை விழிப்­பூட்டும் வேலையைச் செய்ய உத்­த­ர­விட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சம்பந்தர் இவ்­வி­ட­யத்தில் இது­வரை இருந்­தது போல் அச­மந்­த­ராக இருக்க முடி­யாது. என்­றுமே நிகழ முடி­யாத பெருங்­க­ன­வொன்றை விதைத்து ஒரு தமிழ்த் தலை­மு­றை­யையே ஆயுத வன்­மு­றைக்குள் அகப்­ப­டுத்­திய அர­சியல் தலை­வர்­களுள் இன்னும் உயி­ரோடு இருக்கும் இவர் தனது அனு­பவப் பகிர்வைச் செய்யும் கடப்­பா­டு­டை­யவர். ஆகையால் இவரும் இவர்தம் மக்கள் பிர­தி­நி­தி­களும் நாட்­டுக்கு அனு­பவ உப­தேசம் செய்தல் வேண்டும். 

முஸ்லிம் தலை­வர்­களும், அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அறிக்­கைகள் விடுதல், எரிந்த இடங்­களைக் கோர்ட்டும் சூட்டும் அணிந்­த­படி சென்று பார்­வை­யிடல், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆறுதல் கூறல், இளை­ஞர்­களே அணி திர­ளுங்கள் என்று பக்­கு­வ­மற்ற முறையில் வாயால் கண்­ணி­வெடி புதைத்தல், ஜனா­தி­ப­திக்கும்- பிர­த­ம­ருக்கும் இவ்­வி­ட­யத்தில் நமக்குச் சொல்லப் பதி­லேதும் இல்லை என்­பதை விளங்கிக் கொள்­ளாமல் அவர்­களைச் சந்­திக்கத் தவம் கிடத்தல், பௌத்த போதகர் உடை அணிந்து கொண்டு வன்­மு­றைக்குத் தூண்டும் நச்­ச­ர­வங்­களை உணர்ச்சி பொங்க வைது தொலைத்தல் போன்ற வழ­மை­யான காற்றில் கலந்து காணாமல் போகும் நட­வ­டிக்­கை­களை நிறுத்தி நீங்கள் போராட வேண்டும்.

இப்­போ­ராட்­டத்­திற்கு முதலில் "நப்சு" துறந்து தயா­ராக வேண்டும். சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டக் கோரி முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­திகள் அனை­வரும் ஒரு­மித்து பாரா­ளு­மன்றைப் பகிஷ்­க­ரித்துப் பிரச்­சி­னையின் தீவி­ரத்தை உல­குக்கு உரத்துக் கூறலாம். பாரா­ளு­மன்ற முன்­றலில் கொடி பிடித்துக் கோஷ­மிட்டு தேசிய சர்­வ­தேச ஊட­கங்­களின் கவ­னத்தை ஈர்த்து நிவா­ரணம் தேடலாம்.

தங்­களின் ஜன­நா­யகப் போராட்­டத்­துக்கு ஏனைய சிங்­கள, தமிழ் முற்­போக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைக் கோரலாம். பாரா­ளு­மன்றம் கூடும் வேளை நடுவில் அமர்ந்து நியாயம் கேட்­கலாம்.

முக்­கிய சட்டம் ஒன்றை அரசு நிறை­வேற்ற முற்­பட்டால் ஆத­ரவை மறுக்­கலாம், அல்­லது எதிர்த்து வாக்­க­ளிக்­கலாம். எது­வுமே எடு­ப­ட­வில்லை என்றால் அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டுப் பின் ஆசனங்களில் அமரலாம். மக்கள் பிரதிநிதிதிகள் பல முறைகளில் போராடி வழிகாட்டிய பின்னர்தான் மக்களைப் போராட்டத்துக்கு அழைக்க வேண்டும். இவைகளைச் செய்வதற்கு முஸ்லிம் தலைவர்கள் அணிந்திருக்கும் இயக்க அலங்கார ஆடைகளைக் களைய வேண்டும்.

தாங்கள் அணிந்திருக்கும்  அரச அனுசரணை எனும் கௌரவ ஆபரணத்தையும் களற்றி வீச வேண்டும். கலவர முஸ்தீபுகளைக் கண்டுகொள்ளாது விட்டால் நாடு கொள்ளாது. தூரத்து இடியும், முழக்கமும்  நமது வாசல் படியில் வாசம் செய்ய அனுமதிப்போமானால் அப்பாவி மக்களைத் தீவிரவாதம் கொல்லாது விடாது.

இறுதியில், இந்தியா தலைமையில் பாகிஸ்தான் உள்ளிட்ட பன்னாட்டு அமைதிப்படை இலங்கைக்கு வந்து இலங்கையர்களை இலங்கையர்களிடம் இருந்து பாதுகாக்கவேண்டிய ஆசியாவின் ஆச்சரியம் நடந்தேறவும் கூடும்.

Comments