கம்பளை சிறுவன் சல்மான் கடத்தலின் முக்கிய சந்தேக நபர் தலைமறைவு.. தீவிரமாக தேடி வரும் பொலிசாருக்கு உங்கள் உதவி தேவை.
கடந்தவாரம் கம்பளை சிறுவன் சல்மான் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிகழ்வில் கைதுசெய்யப்பட்ட "அஸாம்" என்பவரின் வாக்குமூலத்தின் படி, இக்கடத்தலின் முக்கிய சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள "மொஹமட் அஷாத்" (Mohamed Ashadh) என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளதால், பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மட்டக்களப்பு - கரடியனாறில் ஒரு வீட்டில் வைத்து இச்சிறுவனை பொலிஸார் மீட்டபோது, அவ்வீட்டிலிருந்து இந்நபரின் கடவுச்சீட்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஏனையோருக்கு 'ஷெயார்' செய்யுமாறும், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 119 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் பாதிக்கபட்ட குழந்தையின் உறவினர்கள் கணிவாய் வேண்டுகின்றனர்.


Comments
Post a Comment