கிண்ணியா: மாணவர்கள் ,ஆசிரியர்கள், அதிகாரிகள் கௌரவிப்பு (photo)

Ihzana Fareed

கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி சாதனைபடைத்த பாடசாலை மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியர்களையும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கும் இரண்டாவது வருடமாக இடம்பெற்று வரும் ” வர்ண இரவு” நிகழ்வு (17) இரவு கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை தலைமையில் கிண்ணியா தேசியப் பாடசாலையில் கோலாகலமாக இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அஸங்க அபயவர்தன, அதிதிகலாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் மற்றும் கிழக்கு மாகாணத் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர். ஏ.எம்.எம்.உனைஸ், கிழக்கு மாகாண உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஈ.ஜி.பி.ஐ.தர்மதிலக , கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளதைப் படத்தில் காணலாம்.











Comments